districts

உக்ரைன் விவகாரம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உதவி எண்கள்

கள்ளக்குறிச்சி, பிப்.27 கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்துள்ளவர்கள் உக்ரைன் நாட்டில்   இருந்தால் அவர்கள் அல்லது அவரது குடும்பத்தினர்கள் உதவிக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள செல்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. உக்ரைன் நாட்டிற்கும், ரஷ்யாவிற்கும் தற்போது போர் நடைபெற்று வருகிறது. எனவே உக்ரைன் நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்துள்ளவர்கள் இருந்தால் அவர்கள் அல்லது அவரது குடும்பத்தினர்கள் உதவிக்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை எண் 04151-228801 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் செல்போன் எண் 9444605018, அலுவலக மேலாளர் (குற்றவியல்) சிவசங்கரன் செல்போன் எண் 9453050814) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

;