districts

img

கள்ளச்சாராயம்: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திடுக

மயிலாடுதுறை, ஜூன் 25- தடை செய்யப்பட்ட சுருக்குமடி  வலை பயன்பாட்டை தடுத்து நிறுத்தி மீறுவோர் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கக் கோரி  மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம் பாடியில் செவ்வாயன்று மாபெரும்  போராட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவக் கிராமங்கள் உள்ளன.

இதில் மயிலாடுதுறை மாவட்ட  தலைமை கிராமமான தரங்கம்பாடி  மீனவ கிராமம் தலைமையில், 19  மீனவ கிராமங்கள் சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, முற்றிலுமாக தடைசெய்ய வலியு றுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பூம்புகார் மீனவ  கிராமம் தலைமையில், சுருக்குமடி வலைக்கு ஆதரவாக செயல்பட்டு சில மீனவ கிராமங்கள் தொழில் செய்து வருகின்றன. மேலும், சுருக்குமடிவலை, இரட்டைமடி வலைகள் மற்றும் அதிவேக குதிரை திறன் கொண்ட எஞ்சின் பொருத்திய விசைப்படகுகள் மற்றும் சீனா என்ஜின் பொருத் திய அதிவிரைவு படகுகள் பயன் படுத்த அரசு தடை விதித்துள்ளது.  

இதை மீறும் வகையில், சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கப்பட்டு வருவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் உருவாகியது. இதனால், மாவட்ட  ஆட்சியர் மகாபாரதி தலைமை யில், திங்களன்று மயிலாடுதுறை யில் இருதரப்பைச் சேர்ந்த மீனவ  கிராமங்கள் பங்கேற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப் படவில்லை. இந்நிலையில் சுருக்குமடி, இரட்டைமடி மற்றும் அதிவேக குதிரை திறன் கொண்ட எஞ்சின் பொருத்திய விசைப்படகுகளை முற்றிலுமாக தடை செய்ய வலி யுறுத்தி, மயிலாடுதுறை மாவட்ட தலைமை மீனவ கிராமப் பஞ்சா யத்தார்கள் தலைமையில், மாவட்டத் தில் உள்ள தரங்கம்பாடி, கொடியம் பாளையம், பழையாறு, சின்ன கொட்டாய்மேடு, கூழையாறு, தொடுவாய், கீழமூவர்கரை, மேல மூவர்கரை, சாவடிகுப்பம், நாயக்கர்குப்பம், வானகிரி, சின்ன மேடு, சின்னங்குடி, தாழம்பேட்டை,  புதுப்பேட்டை, பெருமாள் பேட்டை, வெள்ளக்கோவில், குட்டி யாண்டியூர் மற்றும் சின்னூர் பேட்டை ஆகிய 19 மீனவக் கிராமத் தினர் தரங்கம்பாடியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவ தாக அறிவித்தனர்.

அதன்படி, செவ்வாயன்று தரங் கம்பாடி கடைவீதியில் ஆயிரக்கணக் கான மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களுக்கு ஆதர வாக தரங்கம்பாடியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. தரங்கம்பாடி வக்பு நிர்வாக சபை சுன்னத் ஜமாத் நிர்வாகிகள், கார்,  வேன், ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தி னர், வர்த்தக சங்கத்தினர் உள்ளிட்ட  அமைப்பைச் சேர்ந்தோர், மீன வர்களுக்கு  ஆதரவாக போராட்டத் தில் கலந்து கொண்டனர்.

மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட் டம் செய்து, அதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட உள்ளதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த நாகை மீன் வளத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி தலைமையில் அதி காரிகள் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, “அரசா தடை செய் யப்பட்ட சுருக்குமடி வலை மற்றும்  இரட்டைமடி வலைகளை கொண்டு  மீன் பிடிப்பவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கப்படும். அவர்களு டைய படகுகள், வலைகள் பறி முதல் செய்யப்படும்” என உறுதி அளிக்கப்பட்டது.

அதன்பேரில் போராட்டத்தை தற்காலிகமாக மீன வர்கள் ஒத்தி வைத்தனர்.  போராட்டத்தையொட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக் குமார் (ஏடிஎஸ்பி) தலைமையில், மயிலாடுதுறை, நாகை, திருவா ரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக் கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப் பட்டிருந்தனர்.

மயிலாடுதுறை, ஜூன் 25- தடை செய்யப்பட்ட சுருக்குமடி  வலை பயன்பாட்டை தடுத்து நிறுத்தி மீறுவோர் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கக் கோரி  மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம் பாடியில் செவ்வாயன்று மாபெரும்  போராட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவக் கிராமங்கள் உள்ளன. இதில் மயிலாடுதுறை மாவட்ட  தலைமை கிராமமான தரங்கம்பாடி  மீனவ கிராமம் தலைமையில், 19  மீனவ கிராமங்கள் சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, முற்றிலுமாக தடைசெய்ய வலியு றுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பூம்புகார் மீனவ  கிராமம் தலைமையில், சுருக்குமடி வலைக்கு ஆதரவாக செயல்பட்டு சில மீனவ கிராமங்கள் தொழில் செய்து வருகின்றன.

மேலும், சுருக்குமடிவலை, இரட்டைமடி வலைகள் மற்றும் அதிவேக குதிரை திறன் கொண்ட எஞ்சின் பொருத்திய விசைப்படகுகள் மற்றும் சீனா என்ஜின் பொருத் திய அதிவிரைவு படகுகள் பயன் படுத்த அரசு தடை விதித்துள்ளது.  இதை மீறும் வகையில், சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கப்பட்டு வருவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் உருவாகியது. இதனால், மாவட்ட  ஆட்சியர் மகாபாரதி தலைமை யில், திங்களன்று மயிலாடுதுறை யில் இருதரப்பைச் சேர்ந்த மீனவ  கிராமங்கள் பங்கேற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப் படவில்லை.

இந்நிலையில் சுருக்குமடி, இரட்டைமடி மற்றும் அதிவேக குதிரை திறன் கொண்ட எஞ்சின் பொருத்திய விசைப்படகுகளை முற்றிலுமாக தடை செய்ய வலி யுறுத்தி, மயிலாடுதுறை மாவட்ட தலைமை மீனவ கிராமப் பஞ்சா யத்தார்கள் தலைமையில், மாவட்டத் தில் உள்ள தரங்கம்பாடி, கொடியம் பாளையம், பழையாறு, சின்ன கொட்டாய்மேடு, கூழையாறு, தொடுவாய், கீழமூவர்கரை, மேல மூவர்கரை, சாவடிகுப்பம், நாயக்கர்குப்பம், வானகிரி, சின்ன மேடு, சின்னங்குடி, தாழம்பேட்டை,  புதுப்பேட்டை, பெருமாள் பேட்டை, வெள்ளக்கோவில், குட்டி யாண்டியூர் மற்றும் சின்னூர் பேட்டை ஆகிய 19 மீனவக் கிராமத் தினர் தரங்கம்பாடியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவ தாக அறிவித்தனர்.

அதன்படி, செவ்வாயன்று தரங் கம்பாடி கடைவீதியில் ஆயிரக்கணக் கான மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களுக்கு ஆதர வாக தரங்கம்பாடியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. தரங்கம்பாடி வக்பு நிர்வாக சபை சுன்னத் ஜமாத் நிர்வாகிகள், கார்,  வேன், ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தி னர், வர்த்தக சங்கத்தினர் உள்ளிட்ட  அமைப்பைச் சேர்ந்தோர், மீன வர்களுக்கு  ஆதரவாக போராட்டத் தில் கலந்து கொண்டனர். மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட் டம் செய்து, அதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட உள்ளதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்த நாகை மீன் வளத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி தலைமையில் அதி காரிகள் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, “அரசா தடை செய் யப்பட்ட சுருக்குமடி வலை மற்றும்  இரட்டைமடி வலைகளை கொண்டு  மீன் பிடிப்பவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கப்படும். அவர்களு டைய படகுகள், வலைகள் பறி முதல் செய்யப்படும்” என உறுதி அளிக்கப்பட்டது. அதன்பேரில் போராட்டத்தை தற்காலிகமாக மீன வர்கள் ஒத்தி வைத்தனர்.  போராட்டத்தையொட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக் குமார் (ஏடிஎஸ்பி) தலைமையில், மயிலாடுதுறை, நாகை, திருவா ரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக் கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப் பட்டிருந்தனர்.