districts

ஆழ்துளை கிணறு மின்மோட்டர்கள் பழுது நீக்க கள்ளக்குறிச்சி நகரமன்ற கூட்டத்தில் முடிவு

கள்ளக்குறிச்சி, செப்.6- கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் தலைவர் சுப்ராயலு தலைமையில் நகரமன்றக் கூட்டம் நடை பெற்றது. ஆணையர் குமரன் முன்னிலை வைத்தார். துணைத் தலை வர் ஷமீம் பானு வர வேற்றார்.  இந்த கூட்டத்தில் கள்ளக் குறிச்சி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் போர் வெல், மின் மோட்டார்கள், மினி டேங்குகள் ஆகிய வற்றை பழுது நீக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வருவது என்றும் கோமுகி ஆற்றங்கரையில் உள்ள உரக்கடங்கில் சேகரித்து வைத்துள்ள குப்பைகளை பயோ மைனிங் முறையில் அப்புறப்படுத்துவது என்றும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.  குடிநீர் வழங்கல் பணி களுக்கு ஒப்பந்த அடிப்படை யில் பணியாளர்களை நிய மித்து பணிகளை முழுமைப்படுத்துவது, நக ராட்சிக்கு புதியதாக ஜீப்பு வாங்குவது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.  பணியின் போது மரண மடைந்த நகராட்சி தூய்மை பணியாளர் குடும்பத்தினருக்கு விடுப்பு நிலுவைத் தொகை யாக ரூ 2.96 லட்சத்திற் கான காசோலை வழங்கப் பட்டது. இதில் நகராட்சி பொறியாளர் முருகன், துப்புரவு ஆய்வாளர் சையத் காதர், நகர மைப்பு ஆய்வாளர் தாமரைச் செல்வன், பணி மேற்பார்வையாளர் முகமது சுபேர், பணி ஆய்வாளர் கோபிநாத் மற்றும் கவுன்சிலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

;