districts

img

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 183 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

கள்ளக்குறிச்சி, செப்.4- கள்ளக்குறிச்சி, பெரம்ப லூர் மாவட்டங்களில் வேளாண் உழவர் நலத் துறை சார்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். அரசு செயலர் மற்றும் வேளாண்மை உற்பத்தி ஆணையர் சமய மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன். மணி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு ஆகி யோர் கலந்து கொண்டு வேளாண்மைத்துறை சார்பில் அமைக்கப்பட்டி ருந்த அரங்குகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டனர். கல்வெட்டுகளை திறந்து வைத்தனர். மேலும் ஒரு கோடியே 29 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் 183 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி னர்.

;