districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கு  தனித்துவம் அட்டை: ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி, நவ. 8- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த, கூட்டத்தில் முதியோர், விதவை, ஆதரவற்றோர் உதவித்தொகை, வீட்டு மனைப் பட்டா, சாலை வசதி என 404 மனுக்கள் மாற்றுத்திறனாளிகளிடம் பெற்றனர். அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (யு.டி.ஐ.டி-கார்டு) மூலமாக அரசு உதவிகள் மற்றும் பல்வகை உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, கிராம நிர்வாக அலுவலகங்கள் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் புத்தக வடிவிலான அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல், புகைப்படம், கைப்பேசி எண் ஆகிய விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள்விடுத்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;