கரூர், செப்.11- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கரூர் மாவட்ட சிறப்பு பேரவை சிஐடியு அலு வலகத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ். கண்ணகி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் ஜி.ஜீவா னந்தம் துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் கே.வி.கணேசன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு நிறைவுரையாற்றினார். தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் பி.ராஜு வாழ்த்திப் பேசி னார். பேரவையில் புதிய மாவட்ட நிர்வா கிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக கே.கணேசன், மாவட்டச் செயலாளராக எஸ்.கண் ணகி, மாவட்ட பொருளாளராக எஸ்.சர வணன், துணைத்தலைவராக குழந்தை வேல், துணைச் செயலாளராக பாபு உள்பட 13 பேர் கொண்ட புதிய மாவட் டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப் படும் மாதாந்திர உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். பார்வை திறன், வாய் பேசாத மற்றும் காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கும், 75 சதவீதம் மேல் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், நூறு நாள் வேலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை நாட்களை 200 நாட்களாகவும், சம்ப ளத்தை ரூ.600 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.