districts

img

கரூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்

கரூர், செப்.21 - தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் சார்பில் 30-வது தேசிய குழந்தை கள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரி யர் பயிற்சி முகாம் தமிழ்நாடு அறி வியல் இயக்கத்தின் கரூர் மாவட்ட குழு  சார்பில் தாந்தோணி மலையில் உள்ள  அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.  பயிற்சி முகாமிற்கு கரூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.கௌசல்யா தலைமை வகித்தார். ஆரோக்கிய பிரேம்குமார் வரவேற்று பேசினார். கரூர் மாவட்ட செயலாளர்  ஐ.ஜான்பாஷா துவக்கி வைத்து பேசி னார். மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் என்.கீதா,  நல்லாசிரியர் விருது பெற்ற ஏழு ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நினைவு பரிசுகளை வழங்கி சிறப்புரை யாற்றினார். மாவட்ட கல்வி அலுவலர் என்.விஜ யேந்திரன், மாநில செயலாளர் மு.தியாகராஜன், மாவட்ட துணை செயலாளர்கள் முனைவர் என்.சாகுல் அமீது, வி.பழனியப்பன், மாவட்ட  துணை தலைவர்கள் பொன் ஜெயராம், முனைவர் சொ.இராமசுப்ரமணியம், மாவட்ட தலைவர் தீபம்சங்கர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜ.ஜெயராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.   இந்திய அரசின் அறிவியல் தொழில் நுட்ப துணையுடன், தமிழ்நாடு அறி வியல் இயக்கம் இணைந்து ஆண்டு தோறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தி வருகிறது. இம்மாநாடு  பள்ளி மாணவர்களை இளம் விஞ்ஞா னிகளாக உருவாக்கவும், அவர்களது அறிவியல் ஆய்வு மனப்பான்மையை வளர்க்கும் விதத்திலும் நடத்தப்படு கிறது.

இந்த ஆண்டு கருப்பொரு ளாக ‘ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக் காக சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்து  கொள்வது’ என்ற தலைப்பு கொடுக்கப் பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் ஆய்வுக்கு உதவி செய்யும் வழிகாட்டி  ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்கப் பட்டது. உங்கள் சுற்றுச்சூழல் அமைப்பை அறிந்து கொள்ளுங்கள் என்ற தலைப் பில் வி.ஆரோக்கிய பிரேம்குமார், ஆரோக்கிய ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வை வளர்ப்பது என்ற தலைப் பில் தனபால், சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்திற்கான சமூக மற்றும் கலாச்சார நடைமுறைகள் என்ற தலைப் பில் திலகவதி, சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்திற்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்பு என்ற தலைப்பில் பேரா. செந்தில்குமார், சுற்றுச்சூழல் அடிப்ப டையிலான தற்சார்புக்கான அணுகு முறை என்ற தலைப்பில் ஜ.ஜெயராஜ் ஆகியோர் பேசினர். கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் கள் கலந்து கொண்டனர்.

;