districts

விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் வி.தொ.ச கிருஷ்ணராயபுரம் ஒன்றிய மாநாடு கோரிக்கை

கரூர், அக்.9 - அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்கத் தின் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய மாநாடு மகாதானபுரத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன்றியச் செயலாளர் கே. கண்ணதாசன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் இரா.முத்துச் செல்வன் மாநாட்டை துவக்கி  வைத்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் ஜி.தர்ம லிங்கம், மாவட்டக் குழு  உறுப்பினர் வக்கீல் சர வணன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசி னார். விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் சண்முகவள்ளி நிறைவுரையாற்றினார். ஒன்றியத்தின் புதிய தலைவராக சுப்பிரமணியன், செயலாளராக எ.தர்மராஜ், பொருளாளராக லட்சுமி உள்ளிட்ட 12 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய் யப்பட்டது.  சொந்த வீடோ, இடமோ  இல்லாத விவசாயத் தொழிலாளர் குடும்பங் களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள இலவச  வீட்டுமனைப் பட்டாவை  வழங்கிட வேண்டும். முதி யோர் உதவித்தொகையை 60 வயதான அனைவ ருக்கும் வழங்கிட வேண்டும். தேசிய ஊரக வேலைத் திட்டத்தை 200 நாள் வேலையாகவும், தினசரி சம்பளத்தை 600 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கிட வேண்டும். கிரு ஷ்ணராயபுரம் ஒன்றியத் தில் இலவச வீட்டு மனை  பட்டா, இலவச குடிமனை  பட்டா கேட்டு விண்ணப் பித்த அனைத்து பயனாளி களுக்கும் உடனடியாக இலவச வீட்டு மனை பட்டா, குடிமனைப் பட்டாவை வழங்கிட கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

;