districts

img

கடலூரில் பாரம்பரிய விளையாட்டு திருவிழா

கடலூர், ஜன. 17- கடலூர் அண்ணா விளை யாட்டு அரங்கில் பொங்கல் பண்டி கையையொட்டி “நம்ம கடலூர்” சார்பில் பாரம்பரிய விளையாட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிர மணியம், தமிழக உழவர் நலன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகி யோர் கலந்து கொண்டு விளை யாட்டுப் போட்டியையும், பாரம் பரிய பொருட்களின் கண்காட்சி யையும் துவக்கி வைத்தனர். இதில் சிலம்பம், இளவட்டக் கல் தூக்குதல், பம்பரம் விடுதல், கபடி, கோலப் போட்டிகள் நடத்தப் பட்டன, இதில் மாணவ மாணவி கள் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர். பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையில் அழிந்து வரும் நாட்டு மாட்டு வகைகளை காட்சிப் படுத்தியி ருந்தனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழக அரசு இந்த ஆண்டை சிறுதானியங்கள் ஆண்டாக கடை ப்பிடித்து வருவதால் இயற்கை க்கு மக்கள் திரும்பி வருகின்ற னர் என்றார். இதில் பள்ளி மாண வர்களின் தற்காப்பு கலை நிகழ்ச்சி கள் பார்வையாளர்களை வெகு வாக கவர்ந்தது.

;