districts

img

தாலிக்கு தங்கம் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துக மாதர் சங்க கடலூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

கடலூர், ஜூன் 23- பெண்கள் மீதான பாலி யல் வன்முறையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் கடலூர் மாவட்ட 16ஆவது மாநாடு நெய்வேலியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் முத்துலட்சுமி, மாநிலக்குழு உறுப்பினர் வி.மேரி, மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.சாந்த குமாரி ஆகியோர் தலைமை தாங்கினர். பி.மாதவி வரவேற்றார். என்.அங்கம்மாள் சங்க கொடியை ஏற்றிவைத்தார். மாவட்ட துணைச் செய லாளர் அன்பு செல்வி அஞ்சலி திர்மானத்தை வாசித்தார். அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி மாநாட்டை துவக்கி வைத்தார். மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி மாநாட்டை நிறைவு செய்து பேசினார். மாவட்டச் செயலாளர் பி.தேன்மொழி வேலை அறிக்கையையும், பொரு ளாளர் ஏ.தைனிஸ் மேரி வரவு-செலவு அறிக்கையை யும் சமர்ப்பித்தனர். மத்தியகுழு உறுப்பினர் ஜி.பிரமிளா, சிஐடியு தலைவர் எஸ்.திருஅரசு, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி.கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
தீர்மானங்கள்
மூவாலூர் ராமமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம், தாலிக்கு தங்கம் திட்டத்தை மீண்டும் அமலாக்க வேண்டும், பெண்கள் மீதான பாலியல் வன்முறையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக மல்லிகா, செயலாளராக மாதவி, பொருளாளராக ரேவதி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

;