districts

img

பிச்சாவரம் சுற்றுலா மையம் உலகத்தரம் வாய்ந்ததாக மேம்படுத்தப்படுமா?

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே 15  கி.மீ தொலைவில்  கிள்ளை  பேரூராட்சியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந் துள்ளது. இது சுமார் 1,100 ஹெக்டேர்  பரப்பளவில்  4500 கால்வாய்களுடன் அமைந்துள்ள  உலகின் 2-வது பெரிய சதுப்பு நில  காடுகள் (அலையாத்தி) ஆகும். கடல் முகத்து வாரத்தில் அமைந்துள்ள இந்தக் காடுகளில் இயற்கை மூலிகை மரங்களான சுர புண்ணை, தில்லை, சங்கு செடி, பீஞ்சல், பூவரசு, வெண் கண்டல், சிறுகண்டல் உள் ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மூலிகை தாவர செடிகள் உள்ளன. இதில் தில்லை நடராஜர் கோவிலின் தல  விருச்சம் என கூறப்படு கிறது. 

பிச்சாவரம் அலை யாத்தி காடுகள் கடலையொட்டி அமைந்தி ருக்கிறது. ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் இருக்கும் நிலம்.  சதுப்பு நிலங்களில் அலையாத்தித் தாவரங்கள் நன்கு வளர்கி றது. இந்தக் காட்டில் சுரபுன்னை மரங்களின் காய்கள் முருங்கைக்காய் போல் நீண்டிருக்கும். இந்தக்  காய்கள் சேற்றில் விழுந்து  செடியாகி, சில ஆண்டு களில் மரமாக வளர்ந்து விடும். இந்த மரங்கள் 60  விழுக்காடு உப்பு நீரிலும்,  40 விழுக்காடு நன்னீரிலும்  வளர கூடிய தன்மையுடை யது. 

பழுத்த இலைகள் நீரில் விழுந்து அழுகி, உணவாகக் கிடைப்பதால், இங்கு மீன், இறால்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. இங்கு பிடிக்கப்படும் கட்டு நண்டு கள் பல்வேறு நாடுகளுக்கு  ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதி களில் இருந்து, பறவைகள் இங்கு வந்துசெல்கின்றன. செப்டம்பர் முதல் ஏப்ரல் வரை பறவைகளின் வரவு அதிகமாக இருக்கும். குறிப்பாக நவம்பர் முதல் ஜனவரி வரை பிச்சாவரம் வரும் பறவைகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும். ஆகையால் இந்தப் பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக வனத்துறை பரா மரித்து வருகிறது. இங்குள்ள  நீர்நிலை வற்றாமல் படகு சவாரிக்கு ஏற்றதாக உள்ளதால் கடந்த 1984ஆம் ஆண்டு  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் பிச்சாவரம் படகு குழாம் துவக்கப்பட்டது. இங்குத் தற்போது 100-க்கும் மேற்பட்ட அளவில் துடுப்பு படகுகள் மற்றும் இயந்திர படகுகள் உள்ளன. இந்தச் சுற்றுலா மையத்திற்கு அரசு விடுமுறை நாட்கள், பண்டிகை காலம், கோடை காலங்களில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணி கள் அதிக அளவில் வருகை  தந்து சதுப்பு நில காடுகளில் பச்சை பந்தல் விரித்தது போல் அலையாத்தி காடு களில் அமைந்துள்ள சுர புன்னை மரங்கள் உள்ளிட்ட  இயற்கை அரண்களை ரசித்தவாறு படகு சவாரி  செய்து மகிழ்ந்து செல்வார் கள்.

தற்போது கோடை விடு முறை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வருகிறார்கள். ஒரு நாளைக்கு 300-க்கும் மேற்பட்ட கார், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனம்  மூலம் வருகை தந்து படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்கிறார்கள்.  இந்த நிலை யில்  திமுக அரசு பதவி யேற்ற, முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் பிச்சா வரம் சுற்றுலா மையம் உலக  தரம் வாய்ந்த சுற்றுலா  மையமாக மேம்படுத்தப் படும் என அறிவித்து ரூ 14.7  கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நடை பெற்று வருகிறது.  இந்த பணி களை விரைந்து முடிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

- அ.காளிதாஸ்

சுனாமியின் தாக்கத்தை குறைத்தது
பிச்சாவரம் சதுப்புநிலங்கள்,  2004 ஆம் ஆண்டு ஆசிய சுனாமியின் பேரழிவுத்  தாக்கங்களைக் குறைக்க உதவியது, “மிதமான” அளவு கார்பன் டை ஆக்சைடைப் பிடித்து  வைத்திருக்க கூடியது என்று ஒரு  ஆய்வு  கூறுகிறது.

சென்னையைச் சேர்ந்த எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை (எம்எஸ்எஸ்ஆர்எப்)  மற்றும்  புனேவில் உள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (ஐஐடிஎம்) இணைந்து நடத்திய ஆய்வின்படி சதுப்புநிலங்கள் ஒரு ஹெக்டேருக்கு ஆண்டுக்கு 1.83 மெட்ரிக் டன் கார்பனை வெளியேற்றுகின்றன.  ஆனால் பருவநிலை மாற்றத்துடன் மழைப்பொழிவு, உப்புத்தன்மை மற்றும் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் பிச்சா வரத்தில் உள்ள சதுப்புநிலப் பரப்பின் கார்பன் பரிமாற்றத்தை  பாதிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள்  தெரிவித்தனர் .  வெள்ளம் மற்றும் சூறாவளியால் பாதிக்கப்படும் கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம்,   தமிழ்நாட்டின் தலை நகரான சென்னையில் இருந்து சுமார் 220 கிமீ தொலை வில் உள்ளது மற்றும் பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.

படகுசவாரி கட்டண விவரம்
பிச்சவாரம்  சுற்றுலா வளாகத்தில் படகு குழாமை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் நடத்தி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் பிச்சவாரம் வனப்பகுதியை பார்க்கும் வகையில் உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.  படகு குழாமில் உள்ள துடுப்பு படகில் 6 பேர் பயணம் செய்ய ஒரு மணிநேரத்திற்கு ரூ.650 கட்டணமும் இயந்திர படகில் ஒரு மணி நேரத்திற்கு 8 பேர் பயணம் செய்ய ரூ.1850 வசூலிக்கப்படுகிறது.

 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை படகு சவாரிக்கு அனுமதி வழங்கப்படுகிறது.  இதேபோல் பிச்சாவரம் சுற்றுலா மைய வளாகத்தில் வனத்துறை சார்பிலும் படகு குழாம்  அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தனிக்கட்டணம் நிர்ணயிக் கப்பட்டுள்ளது. இதிலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து வருகின்றனர்.  சுற்றுலா மையத்தில் 60க்கும் மேற்பட்ட துடுப்பு படகுகள், 15-க்கும்  மேற்பட்ட இயந்திர படகுகள் உள்ளன. மேலும் பிச்சவரம் சுற்றுலா  மையத்தையொட்டியுள்ள  எம்.ஜி.ஆர் திட்டு,  முடசல் ஓடை, பில்லு மேடு உள்ளிட்ட பகுதிகள் திட்டுப் பகுதிகளாக உள்ளது. இதனை சீரமைத்து சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;