கடலூர்,ஜூன் 20 - கடலூர் மாவட்டத்தில் கூலி உயர்வு பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்று பித்தளை பாத்திர தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கடலூர் மாவட்ட பித்தளை பாத்திர தொழிலாளர் சங்கத்தின் ஆண்டு பேரவை கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் நிலுவையில் உள்ள நலவாரிய பண பயன்கள் மற்றும் சலுகைகள், பென்சன் உள்ளிட்டவைகளை கால தாமதமின்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல், மாவட்ட துணைத் தலைவர் வி.சுப்புராயன் ஆகியோர் உரையாற்றினர். சங்கத்தின் மாவட்டத் தலைவராக ஆர்.ரவி, மாவட்டச் செயலாளராக எஸ்.ராஜ், பொருளாளராக ஆர்.கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.