districts

img

பட்ஜெட்டில் மானியத்தை குறைப்பதா? ஒன்றிய அரசை கண்டித்து கடலூரில் ஆர்ப்பாட்டம்

கடலூர், பிப். 24- பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கான மானியத்தை குறைத்த ஒன்றிய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடலூரில்  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. 100 நாள் வேலை திட்டத் தில் ரூ.30 ஆயிரம் கோடி, உணவு மானியத்தில் ரூ.90  ஆயிரம் கோடி, உர மானி யத்தில் ரூ.50 ஆயிரம் கோடி, பிரதமர் கிசான் நிதியத்தில் ரூ. 8 ஆயிரம் கோடி, பெட் ரோலிய மானியம் ரூ.7 ஆயிரம் கோடி என அனைத் திலும் மானியம் குறைக் கப்பட்டதைக் கண்டித்தும், வேலையின்மை, விலை வாசி உயர்வை கண்டித்தும் மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் தலைமையில் கடலூர் ஜவான் பவன் அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் மத்திய குழு உறுப் பினர் உ.வாசுகி, மாவட்டச்  செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் வி.சுப்பராயன்,  ராஜேஷ் கண்ணன், ஆர்.ராமச்சந்திரன், பி.தேன்மொழி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ். கே.பக்கிரான், ஆர்.ஆளா வந்தார் ஆகியோர் பேசினர்.

;