districts

img

கெடிலம் ஆற்றில் ஆலை கழிவுகள் கலப்பு கடலூர் குடியிருப்போர் சங்கம் ஆவேசம்

கடலூர், செப். 17- கெடிலம் ஆற்றில் இஐடி  பாரி தனியார் சர்க்கரை ஆலையின் கழிவுநீர் கலப் பதை கண்டித்து கடலூர் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சனிக்கிழமை (செப். 17) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கடலூர் கெடிலம் ஆற்றில் சர்க்கரை ஆலை யின் கழிவுநீர் கலப்பதால், கம்மியம்பேட்டை தடுப்பணை ஆலைக் கழிவு களை தேக்கி வைக்கும் தொட்டியாக மாறியுள்ளது. எனவே ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண் டும், குடியிருப்பு பகுதிக ளின் அருகில் உள்ள அரிசி ஆலைகளில் இருந்து வெளியேறும் சாம்பலால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசு குறித்து விரிவாக ஆய்வு நடத்த வேண்டும். மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், கடலூர் மாநகராட்சி அருகில் உள்ள ஊரகப் பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க வடி கால் வசதி ஏற்படுத்த வேண் டும், கெடிலம், தென் பெண்ணையாற்றின் கரை களை பலப்படுத்த வேண் டும், மழையால் பாதிக்கப் பட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே இந்த  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கூட்டமைப்பு தலைவர் பி.வெங்கடேசன் தலைமை தாங்கினார். பொதுச்  செயலாளர் மு.மருத வாணன், இணை பொதுச்  செயலாளர் டி.புருஷோத் தமன், பொருளாளர் கே.பி.சுகுமாறன், நிர்வாகிகள் கண்ணபிரான், கோபால், லட்சுமிநாராயணன், என்.காசிநாதன், ரமணி, கல்யாண குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

;