districts

img

போதைக்கு எதிராக கடலூரில் வாலிபர் சங்கத்தினர் பொதுக்கூட்டம்

கடலூர், ஜூன் 27- கள்ளச்சாராயத்தை எதிர்த்து போராடியதால் கொலை செய்யப்பட்ட தோழர்கள் குமார் ஆனந்தனின் 25 வது ஆண்டு நினைவு தினத்தை யொட்டியும், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் புதனன்று போதை எதிர்ப்பு பேரணி பொதுக்கூட்டம் கடலூரில் நடைபெற்றது.

கடலூர் ஜவான் பவன் அருகில் இருந்து துவங்கிய போதை எதிர்ப்பு பேரணியில் ஜோதியை மாநகர செய லாளர் ஆனந்தராஜ் எடுத்து வந்தார். புதுப் பாளையம் கடைத் தெரு வில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் கே.சின்னத்தம்பி தலைமை தாங்கினார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் ஏ.வி.சிங்கார வேலு, மத்திய குழு உறுப்பினர் செல்வராஜ், முன்னாள் மாநிலத் தலை வர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்ட செயலாளர் எஸ்.வினோத்குமார், மாவட்ட பொருளாளர் பி.சதீஷ் குமார் ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக மாவட்ட நிர்வாகி கள் டி.பரமசிவம், ஜே.சிவ லோகம், பி.முரளி, பி.ஸ்டீபன்ராஜ், கே. மணிகண்டன், எஸ்.கவியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் எம். கலைவாணன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

 தியாகி குமாரின் தாயார் சாவித்திரி மேடையில் கவுர விக்கப்பட்டார்.  மாநகர செயலாளர் ஏ.ஆனந்தராஜ் நன்றி கூறினார். போதைக்கு எதிரான உறுதிமொழி வாசிக்கப்பட்டது.

;