கடலூர், ஜூலை 18 - தமிழகத்தில் ‘தீக்கதிர்’ சந்தா சேர்ப்பு இயக்கம் ஜூலை 1 முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதில், கடலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக சேகரிக்கப் பட்ட 208 சந்தாக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகியிடம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஞாயி றன்று நடைபெற்ற நிகழ்ச்சி யில் இரண்டாம் கட்டமாக 119 ஆண்டு சந்தாக்கள், 114 அரை யாண்டு சந்தாக்கள் என மொத்தம் 233 சந்தாக்களுக்கு உரிய தொகை 3 லட்சத்து 57 ஆயிரத்து 700 ரூபாய் மாநிலக்குழு உறுப்பினர் பாக்கியத்திடம் வழங்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். மருதவாணன், ஜே.ராஜேஷ் கண்ணன், ஆர்.ராமச்சந்திரன், மாநகரச் செய லாளர் அமர்நாத், கடலூர் ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம், சிப்காட் பகுதிச் செயலாளர், பரங்கிப் பேட்டை ஒன்றியச் செய லாளர் விஜி, தெற்குக் கமிட்டி பொறுப்பாளர் வாஞ்சிநாதன், புவனகிரி பொறுப்புச் செய லாளர் காளி கோவிந்தராஜ், காட்டுமன்னார்கோவில் வட்டச் செயலாளர் தேன்மொழி, சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா, குமராட்சி ஒன்றியச் செய லாளர் மனோகரன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.கே. பக்கி ரான், சிஐடியு மாவட்டத் தலை வர் பி. கருப்பையன், கடலூர் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் துணைத் தலைவர் தேவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.