districts

img

மேலகொளக்குடி ஏரிக்கு என்எல்சி உபநீரை வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

கடலூர், அக். 15- விவசாயிகளின் தேவைக்காக மேல கொளக்குடி ஏரிக்கு என்எல்சி உபரிநீரை குழாய் மூலம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன் ஆட்சி யரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது: குறிஞ்சிப்பாடி ஒன்றியம் மேல கொளக்குடி மற்றும் கருங்குழி கிராமங்களில் நெய்வேலி என்எல்சி நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்த விவ சாயிகளின் 1000 ஏக்கர் நிலங்கள் தண்ணீர் இல்லாமல்காய்ந்து வரு கிறது. என்எல்சி சுரங்கத்தின் மூலம் வெளியேற்றப்படும் உபரி நீர் வீணாக கடலில் கலக்கிறது. அந்த நீரை விவசாய நிலத்திற்கு வழங்க வேண்டும் என பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு பல முறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே என்எல்சி உபரிநீரை ராட்சத குழாய் மூலம் ஏரிக்கு கொண்டு வந்து, அதன் மூலம் விவ சாயிகளின் தேவையை, குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்  பட்டுள்ளது. ஒன்றியச் செயலாளர் எம்.பி.தண்டபாணி, வடலூர் நகரச் செயலாளர் ஆர்.இளங்கோவன், ஜேம்ஸ், மேல கொளக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் சி.ராமன், கருங்குழி ஒன்றியக் கவுன்சிலர் சிற்றரசு சண்முகம், வளையமாதேவி ஊராட்சி மன்றத் தலைவர் வேல்முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

;