districts

விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

சிதம்பரம், செப் 7- வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, கூலித் தொழிலாளர்க ளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு வில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டம் கொள்ளிடம் கரையோரம் உள்ள பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குமராட்சி ஒன்றியம் பெரம்பட்டு, nஜயங்கொண்ட பட்டினம் கீழகுண்டலபாடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் சாகுபடி செய்யப்பட்டிருந்த மரவள்ளி, நெல், வாழை, கரும்பு, மலர் செடிகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன இதனால் பல லட்சக்கணக்கான ரூபாய் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பாதிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் பயிர்களை பார்வையிட்டு வேளாண் துறை, தோட்டக்கலை துறை மூலம் முறையாக கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 50 ஆயிரம் நிவாரணமும், வேலையின்றி தவிக்கும் விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ 25 ஆயிரம் நிவாரணமும் வழங்க வேண்டும் கொள்ளிடம் கரையோர கிராமங்களான வீரன் கோவில் திட்டு, சின்ன காரமேடு, பெரிய காரமேடு மழை வெள்ள காலங்க ளில் பாதிக்காமல் இருக்க இரும்பு கற்களைக் கொட்டி கரைகளை பலப்படுத்த தடுப்புச் சுவர் அமைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

;