சிதம்பரம், ஜூன் 3- சிதம்பரம் நகராட்சி அலு வலகத்தில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்க ஆலோசனைக் கூட்டம் நகரமன்றத் தலைவர் செந்தில்குமார் தலை மையில் நடைபெற்றது. சிதம்பரம் நகரை சிங்கார சிதம்பரமாக மாற்றும் நடவடிக்கை மற்றும் பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாற்றுவது, நகரின் வளர்ச்சி பணிகளுக்குச் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலொசனைகள் வழங்கப்ப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அனைவரும் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக் குமரன், நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீனா, பொறியாளர் மகாராஜன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், ரமேஷ், அப்பு சந்திரசேகரன், மணி, சிபிஎம் 5ஆவது வார்டு உறுப்பினர் தஸ்லீமா, வர்த்தக சங்க நிர்வாகிகள், நகை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், ஓட்டல் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.