districts

img

வடையால் வளர்ந்த சிறு வியாபாரி: 4ஆம் ஆண்டு நினைவு தினம்

சிதம்பரம், டிச.3- கடலூர் மாவட்டம், சிதம்ப ரம் தெற்கு வீதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீனிவாசன் என்பவர் தெருவோரத்தில் தள்ளு வண்டியில் வடை சுட்டு வியா பாரம் செய்து வந்துள்ளார். அவ ரது கடையில் வடையை வாங்குவ தற்காக வாடிக்கையாளர்கள் காத்திருப்பார்கள். அப்படி வடையை விற்று வளர்ந்த கடை சண்முகவிலாஸ் என்ற பெரிய சுவிட் கடையாக வளர்ந்துள்ளது.  இந்த கடையை நிறுவிய ஸ்ரீனிவாசன் 4 ஆண்டுகளுக்கு முன்பு  உயிரிழந்தார். அன்று முதல் அவரது நினைவால் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் சனிக்கிழமை ‘வடை தினம்’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் காலை 8 மணியிலிருந்து இரவு 9 மணி வரைக்கும் பொதுமக்களுக்கு வடை இலவசமாக வழங்கி வரு கின்றனர். இந்த ஆண்டு டிச.3 சனிக்கிழமையன்று அவரது 4 ஆம் ஆண்டு அனுசரிக்கப் பட்டது. இதையொட்டிகடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் அனை வருக்கும் 7 ரூபாய் மதிப்புள்ள 11 ஆயிரம் வடை இலவசமாக வழங்கப்பட்டது. இதில் ஒருவர் எத்தனை வடை வேண்டுமனாலும் அதே இடத்தில் சாப்பிடலாம் ஆனால் பார்சல் எடுத்துபோக அனுமதி இல்லை என்பது குறிப்பிட தக்கது. இந்நிகழ்ச்சியில், கடையின் உரிமையாளர் கணேஷ், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.