districts

img

12 ஆம் வகுப்பு வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி

உடுமலை, ஆக.4- உடுமலையில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு பின் உயர் கல்வி பயில மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி  நடை பெற்றது. திருப்பூர் மாவட்டம், உடுமலை தேஜஸ் மஹாலில் ஆசிரி யர் அரசு ஊழியர் அமைப்புகள் மற்றும் இந்திய மாண வர் சங்கம் சார்பில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு பின் உயர் கல்வி பயில மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க முன்னாள் மாநில பொதுச்செயலாளர் செல்லத்துரை தலைமை வகித்தார். முதுகலை தமிழாசிரியர் மருதமுத்து வரவேற்புரை யாற்றினார். உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க முன்னாள் தலை வர் எஸ்.எம்.நாகராஜன் மாணவர்களுக்கான வழிகாட்டி புத்த கத்தை வெளியிட்டு பேசினார். அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி தமிழாசிரியர் காளிஸ்வர ராஜ், உதவி தலை மையாசிரியர் ஈஸ்வரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வாழ்த் துரை வழங்கி பேசினார்.

இதில், மாணவர்கள் உயர்கல்வி பயில தேவையான வழிகாட்டுதல் இந்நூலில் உள்ளது. அதன்படி மாணவர்கள் இந்த வழிகாட்டுதலை பயன்படுத்தி உயர் கல்வி பயில தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என பேசினர். நிறைவாக. அரசு ஊழியர் சங்க நிர்வாகி பாலசுப்பி’ ரமணியம் நன்றி கூறினார்.

;