districts

img

மனிதநேயச் செயல்பாடுகளால் தாளவாடிக்கு பெருமை சேர்க்கும் இளைஞர்கள்

புன்செய் புளியம்பட்டி,  ஜூன் 19- ஈரோடு மாவட்டம், சத்தியமங்க லம் அடுத்த தமிழக - கர்நாடக எல்லை யில் அமைந்துள்ளது தாளவாடி மலைக்கிராமம். சத்தியமங்கலம் புலி கள் காப்பகத்துக்குட்பட்ட வனப் பகுதிக்குள் அமைந்துள்ள இப்பகுதி யில் ஏராளமான மலைவாழ் மக்கள்  வசித்து வருகின்றனர். அவர்களின் பிரதானத் தொழிலாக விவசாயம் உள் ளது. அதேபோல், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, மான், சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட பல் வேறு விலங்குகள் வசித்து வரு கின்றன. பச்சைப்பசேல் புல்வெளி கள், மலைகளின் நடுவே இயற்கை அரண் சூழ்ந்த இடத்தில் தாளவாடி கிராமம் அமைந்துள்ளது.  இங்குத் தங்களது மனிதநேயச் செயல்பாடுகளால் தாளவாடிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர் விடியல் இளைஞர் மன்றத்தினர்.  

கடந்த நான்கு வருடங்களாக விடி யல் இளைஞர் மன்றம் இலவச மருத் துவ முகாம்கள், விளையாட்டு போட் டிகள், புத்தகத் திருவிழா, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், விபத்து மற்றும் அவசரச் சிகிச்சைக்கு  இலவச ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட  பல்வேறு நற்பணிகளைச் செய்து வருகிறது. இந்த அமைப்பின் தலை வர் பிரபு முன்னாள் தலைவர் மணி  உள்ளிட்ட ஏராளமான இளைஞர்கள் தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொதுமக்களுக்குப் பல் வேறு நலப்பணிகளைச் செய்து வருகின்றனர். தற்போது மலைக் கிராமமான தாளவாடியில் கொரோனா தொற்றால் இறந்தவர் களின் சடலங்களை உரிய முறையில்  அடக்கம் செய்ய உதவி வருகின்ற னர்.   இதுகுறித்து விடியல் இளைஞர் மன்றத் தலைவர் பிரபு மற்றும் முன் னாள் தலைவர் மணி ஆகியோர் கூறு கையில், தற்போது கொரோனா இரண்டாவது அலையில் பலர் உயி ரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாகப் பொதுமக்கள் மற்றும் உறவினர்களே ஒதுங்கி இருக்கும் நிலையில், கொரானா தொற்றால் இறந்தவர் களின் உடலை அடக்கம் செய்ய அவர் களது குடும்பத்தினர் தவித்து வருகின் றனர். இதனால், சம்பந்தப்பட்ட குடும் பத்துடன் நாங்கள் இணைந்து சாதி,  மொழி, இன வேறுபாடுகள் பார்க்கா மல் மனித நேயத்துடன் அவரவர் மதங்களுக்கு ஏற்ப இறுதி அஞ்சலி செலுத்தி உடல்களைத் தகனம் செய்து வருகிறோம். இதுவரை 15க்கும் மேற்பட்ட உடல்களைத் தக னம் செய்துள்ளோம். தொடர்ந்து எங்க ளால் முடிந்த நற்பணிகளைச் செய்து  வருகிறோம் என்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் நெருங்கிய குடும்ப உறுப் பினர்கள், நண்பர்கள் ஆகியோர் விலகி நிற்கும் சூழலில் இறந்தவர் களின் இறுதி சடங்கைச் செய்யத் தவிக்கும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் தங்கள் உயிரைத் துச்ச மென மதித்துச் சேவையாற்றும் விடி யல் இளைஞர் மன்றத்தைச் சேர்ந்த அனைத்து இளைஞர்களுக்கும்  ஊர்  பொதுமக்களும், சமூக ஆர்வலர் களும் வாழ்த்தும், நன்றியும் தெரி வித்து வருகிறார்கள்.

;