districts

img

கள்ளக் கூட்டணியை ஒருபோதும் அவரால் கைவிட முடியாது

ஈரோடு, ஏப்.1- ஈரோடு மாவட்டம் மொடக்  குறிச்சியை அடுத்த சின்னியம் பாளையத்தில், இந்தியா கூட்டணி யின் மக்களவைத் தேர்தல் பிரச்சா ரம் நடைபெற்றது. இதில், நாமக்கல்  தொகுதி வேட்பாளர் மாதேஸ்வ ரன், ஈரோடு தொகுதி வேட்பாளர்  பிரகாஷ், கரூர் தொகுதி வேட்பாளர்  ஜோதிமணி ஆகியோரை அறி முகப்படுத்தி, முதல்வர் மு.க. ஸ்டா லின் உரையாற்றினார். அதன் ஒரு  பகுதி வருமாறு:

அதிமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் என்ன ஆனது?
எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் பொய் பேசுவதை மட்டுமே  வழக்கமாக வைத்துக் கொண்டு  இருக்கிறார்! இவர் என்ன நினைக்கி றார் என்றால், இப்படிப் பொய் பேசி னால் அவர் ஏமாற்றியதை மக்கள்  மறந்து விடுவார்கள் என்று நினைக்கிறார்!

அதிமுக தேர்தல் அறிக்கை யில், இலவச செல்போன் தரு வோம் என்றார்கள், தந்தார்களா? அனைத்து மகளிருக்கும் ஸ்கூட்டி தருவோம் என்றார்களே! தந் தார்களா? அம்மா வங்கி அட்டை  தரப்படும் என்று சொன்னார்களே…  யாருக்காவது கொடுத்தார்களா? பட்டு ஜவுளிப் பூங்காவை உரு வாக்குவோம் என்று சொன்னார் களே… உருவாக்கினார்களா? இதெல்  லாம் ட்ரெய்லர்தான்! மொத்தமாகச் சொல்ல நேரம் பத்தாது! 

மேற்கு மாவட்டங்களுக்கே பாஜகவால் அதிக பாதிப்பு
ஒட்டுமொத்த இந்திய மக்களுக் கும் எதுவுமே செய்யாத பிரதமர்  மோடியும் – ஒன்றிய பா.ஜ.க. அர சும் தமிழ்நாட்டின் மேற்கு மண்ட லத்திற்குத் தாங்கள் ஏதோ சாத னைகளைச் செய்துவிட்டதாக நினைத்து பேசிக் கொண்டு இருக்கி றார்கள். உண்மையில், தொழில் வளம் மிகுந்த இந்த (கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்  டங்களைக் கொண்ட) மேற்கு மண்  டலம் தான், பாஜகவின் இன்னல்  களுக்கு அதிகமாக ஆளாகியிருக்  கிறது… ஜனநாயகம் -நாடாளுமன் றம் - மாநில அரசுகள் - இடஒதுக்கீடு என்று அனைத்தையும் ஒழிக்க நினைக்கும் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் - தமிழ்நாட்டில் தொழில் துறையையே மொத்த மாக இழுத்து மூடிவிடுவார்கள்!  தொழில் வர்த்தகக் கட்டமைப்பை யே சிதைத்துவிடுவார்கள்! அவ ருக்கு நெருக்கமான சிலர் மட்டுமே,  தொழில் வர்த்தகம் செய்ய முடியும்  என்ற நிலையை உருவாக்கிவிடு வார்கள்! எளிய மக்களின் உழைப்  பில் வளர்ந்த சிறு, குறு மற்றும்  நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்  எல்லாத்தையும் அழித்துவிடுவார்கள்! 

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி என 2 செயற்கைப் பேரிடர்கள்
கடந்த ஆட்சியில் என்ன செய் தார் மோடி? திடீர் என்று ஒரு இர வில் தொலைக்காட்சியில் தோன்றி,  கருப்புப் பணத்தை ஒழிக்க, ஐநுறு  ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய்  நோட்டுகளைத் தடை செய்கிறேன்  என்று அறிவித்தார். கருப்புப் பணம் ஒழிந்துவிட்டதா? சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்தானே ஒழிந்  தது! நேற்றுகூட ஒரு விழாவில் மாண்பமை உச்ச நீதிமன்ற நீதியர சர் ஒருவர் பேசியிருக்கிறார், “பண மதிப்பிழப்பைத் திட்டமிடாமல் செயல்படுத்தியிருக்கிறார்கள். நாட்டில் இருந்த ரூபாயில் 86  விழுக்காடாக இருந்த ஐந்நூறு -  ஆயிரம் ரூபாய்கள், பணமதிப் பிழப்பிற்குப் பிறகு, 98 விழுக்காடு  ரிசர்வ் வங்கிக்கே மீண்டும் வந்து விட்டதே… அப்படி என்றால், கருப்பு  பணம் ஒழிந்ததா? கருப்பு பணத்தை  வெள்ளையாக்கத்தான், பணமதிப் பிழப்பு பயன்பட்டிருக்கிறது” என்று  சொல்லியிருக்கிறார்கள். 

இப்படி ஒன்றை முடித்து, அடுத்து உடனே, ஜி.எஸ்.டி. என்ற பெயரில் எல்லா பொருள்கள் மேலும் மிகக் கொடூரமான வரி களைப் போட்டார்கள். ‘சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மட்டும் இல்லாமல் எல்லா தொழில்களும் பாதிக்கப்பட்டன! இப்படி பெரிய  இரண்டு செயற்கைப் பேரிடரை சந்  தித்த தொழிற்துறைக்கு, இயற்கை  இடராகக் கொரோனா வந்தது! 2 ஆண்டுகாலம் அனைத்துத் தொழி லும், மக்களின் வாழ்வாதாரமும் மிக மிகக் கடுமையாகப் பாதிக்கப்  பட்டது! 

மோடி ஆட்சியில் மூடப்பட்ட சிறு, குறு தொழில்கள்
இதற்குப் பிறகும் விடாமல், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு,  மூலப்பொருட்கள் விலை உயர்வு  – இடுபொருட்கள் விலை உயர்வு  - சுங்கச்சாவடி கட்டணச் சுரண்டல்  என்று இந்தப் பகுதியில் இருக்கும்  சிறு, குறு, நடுத்தரத் தொழில் (MSME) நிறுவனங்கள் - ஜவுளித் தொழில் – பேருந்து கூண்டு கட்டும்  தொழில் - கொசுவலை உற்பத்தித்  தொழில் வரை அனைத்துமே பாதித்  திருக்கிறது. ஏராளமான இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்த இந்த நிறுவனங்கள் நலி வடைந்ததால், வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகமாகி விட்டது. உற்பத்தி நடவடிக்கைகள் இந்திய அளவில் குறைந்திருப்பதாக, புள்ளிவிவரங்கள் சொல்கிறது. ஆர்டர்கள் கிடைக்காமல் மில்களை  மூடும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. விசைத்தறிகளுக்கு சோலார் மின்  தகடு அமைக்க மானியம் கிடைப்ப தில்லை! விசைத்தறிகளைத் தரம்  உயர்த்தவும் மானியம் கிடைப்ப தில்லை. MSME-களுக்கு முன்போன்று,   கடனும் - மானியமும் எளிதாகக் கிடைக்கிறதா? சிறு - குறு, தனிநபர்  நிறுவனங்கள் மற்றும் கூட்டா ண்மை நிறுவனங்களுக்கு 30 விழுக்  காடு வருமான வரி விதிக்கப்படுகி றது, ஈரோட்டு மஞ்சள் பலருக்கும் வாழ்வாதாரமாக இருக்கிறது… மஞ்சளை உணவுப் பொருளாக மாற்றிவிட்டால் ஜி.எஸ்.டி போட முடியாது என்று விவசாயிகளின் கோரிக்கையை பா.ஜ.க. அரசு புறக்கணிக்கிறது! 

இப்படிப்பட்ட ஊழல் ஆட்சியை  நடத்தி - கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் மோடி ஊருக்கு உபதேசம் செய்யலாமா? 

மோடியின் மக்கள் விரோத ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி உடந்தை
பாஜக டைரக்‌ஷன்-இல் நடக்  கும் அ.தி.மு.க – பா.ஜ.க. கள்ளக் கூட்டணிக்கு, பாதம்தாங்கி பழனி சாமி புதியதாக ஒரு கதை சொல்லி யிருக்கிறார்! டயலாக் என்ன தெரி யுமா? பாஜகவின் கூட்டணியில் இருந்ததால், விமர்சிக்க மாட்டா ராம்! என்ன ஒரு பதில்! உண்மை  அது இல்லை! அவரால் ஒரு போதும் பிரதமர் மோடியையோ – அமித்ஷாவையோ – ஆளுநரை யோ – ஏன், பா.ஜ.க.வில் இருக்கும்  யாரையும் விமர்சிக்க முடியாது.  ஏன், என்றால் எஜமான விஸ்வாசம்! பதவி சுகத்திற்காகவும் - ஊழல்  வழக்குகளில் இருந்து தப்பிக்க வும் – பாஜகவின் அத்தனை மக் கள் விரோதத் திட்டங்களையும் ஆதரித்தவர் பழனிசாமி! 

ஆட்சியில் இருக்கும்போது வைத்த கூட்டணியை இப்போதும்  ரகசியமாகத் தொடர்ந்துகொண்டு இருக்கிறார். இதற்குச் சுற்றி வளைத்து அவர் கண்டுபிடித்த கார ணம்தான் கூட்டணி தர்மம்! 

ஒருநாளும் பாஜகவை எடப்பாடி எதிர்க்க முடியாது
காலில் தவழ்ந்து சென்று முத லமைச்சர் பதவியை வாங்கிய, அம்  மையார் சசிகலாவைப் பற்றி நீங்  கள் பேசாத பேச்சா? இது என்ன மாதிரியான தர்மம்? கூடவே இருந்த தர்மயுத்தம் ஓ.பி.எஸ்.க்குப் பொதுக்குழுவில் வாட்டர் பாட்டில்  மரியாதை செய்தீர்களே! அது என்ன தர்மம்? இப்போது சமீ பத்தில்கூட, உங்கள் கூட்டணியில்  இருந்து சென்ற – அய்யா ராம தாசை நீங்கள் விமர்சிக்கவில் லையா? இது என்ன கூட்டணி தர்  மத்தில் வராதா? 

பாதம்தாங்கி பழனிசாமி அவர் களே! உங்களால், ஒருபோதும் பாஜகவை விமர்சிக்க – எதிர்க்க முடியாது! அதற்குத் துணிவு வேண்டும்! முதுகெலும்பு வேண்  டும்! ஏன் என்றால், பழனிசாமியின் குடுமி பா.ஜ.க. கையில் இருக்கி றது! என்ன குடுமி? ஊழல் குடுமி!  அதிமுகவின் ஊழல்கள் என்பது, கன்னித்தீவு கதை மாதிரி! 

இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.