districts

img

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி கீழ்பவானி அணை பூங்கா மூடல்

ஈரோடு, ஏப்.11- கொரோனா அச்சுறுத்தல் எதி ரொலியாக கீழ்பவானி அணை பூங்கா தற் காலிகமாக மூடப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையின் முன்பு  15 ஏக்கர் பரப்பளவில் அணை பூங்கா  அமைந்துள்ளது. பூங்காவில் படகு இல்லம், ஊஞ்சல், சறுக்கு விளை யாட்டு, கொலம்பஸ் சிறுவர் ரயில் உள் ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங் களுடன் கூடிய விளையாட்டு சாதனங் களும் உள்ளன. அணை பூங்காவில் தின மும் காலை 8 மணி முதல் மாலை 5மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக் கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், கொரோனா பரவல் தடுக்க பவானிசாகர் அணைபூங்காவை தற்காலிகமாக மூடு மாறு மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தர விட்டார். இதையடுத்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் சனியன்று மாலை  முதல் அணை பூங்காவை மூடியுள்ளனர். அணை பூங்காவிற்கு பார்வையாளர்கள் யாரும் வரவேண்டாம் எனவும் தற்காலிக மாக அணை பூங்கா மூடப்பட்ட நிலையில் மீண்டும் மறு அறிவிப்பு வந்த பின் பூங்கா திறக்கப்படும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

;