districts

img

22 மீனவர்கள் சிறைப்பிடிப்பு இலங்கை கடற்படை அராஜகம்

இராமநாதபுரம், ஜூன் 23 - கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை  கடற்படையினர் கைது செய்வது நீண்ட கால அராஜகமாக உள்ளது.

அந்த வகையில் ஞாயிறனன்று மேலும் 22 மீனவர்களையும், 3 படகு களையும் இலங்கை கடற்படை சிறைப் பிடித்துள்ளது.

சனிக்கிழமையன்று இரவு கடலுக்குள் சென்ற இராமேஸ்வரம் மீன வர்கள், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ஜஸ்டின், ரெய் மெண்ட், ஹெரின் ஆகிய மூவ ருக்குச் சொந்தமான மூன்று விசைப் படகுகளை எல்லை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற் படையினர் பிடித்துச் சென்றுள்ளனர்.

இலங்கை கடற்படையின் இந்த  நடவடிக்கை மீனவர்களை அதிர்ச்சி யில் ஆழ்த்தியுள்ளது. 

இராமேஸ்வரம் மீன்பிடி இறங்கு தளத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பக லில் ஆலோசனை நடத்திய மீனவ சங்க  பிரதிநிதிகள், மீனவர்கள் சிறைப்பிடிக்கப் பட்டதைக் கண்டித்தும், இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை தாயகம் திருப்பி அழைத்து வர நடவடிக்கை எடுத்து வர வலியுறுத்தியும் திங்கட் கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

ஒன்றிய அரசு தொடர் அலட்சியம்
அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

சட்டப் பேரவையில் கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலன் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

“இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படும் போதும், கைது செய்யப்படும் போதும், உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரை நமது முதலமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

தற்போது இலங்கைச் சிறையில் தமிழ்நாட்டைச் சார்ந்த 15 மீனவர்களும் 162 மீன்பிடிப் படகுகளும் உள்ளன. தமிழ்நாட்டின் மீட்புக் குழு இலங்கைக்கு சென்று விடுதலை செய்யப்பட்ட படகுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கான அனுமதியைக் கூட இதுவரை ஒன்றிய அரசு வழங்கவில்லை.

தமிழக - இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு நடத்தப்படும் இந்திய - இலங்கை கூட்டு பணிக்குழு கூட்டம் 2022 மார்ச் மாதத்திற்கு பின்னர் இதுவரை நடைபெறவில்லை.

தமிழ்நாடு மீனவர் பிரச்சனையில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மீனவர்க ளை இந்திய மீனவர்கள் என்று கருதாமல் பாராமுகமாகவே இருந்து வருகிறது. கடந்த காலங்களில் அரசியல்  காரணங்களுக்காக மீனவர்களை ஏமாற்றும் நோக்கத்தில்  ஒன்றிய அமைச்சர்கள் அவ்வப்போது இராமேஸ்வரம் பகுதிகளுக்கு சென்று  மீனவர்களை சந்தித்து இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளை மீட்டுத்தருவோம் என்று வாக்குறுதி தருவதும், சில அரசியல் கட்சியினர் மீனவ பிரதிநிதிகளைத் தில்லிக்கு அழைத்துச் சென்று  ஒன்றிய அமைச்சர்களை சந்திக்க வைப்பதும் அவ்வப்போது நடந்து வருகிறது. ஆனால், சிறைப்பிடிக்கப்பட்டு இலங்கையில் உள்ள படகுகளை மீட்பதற்கு எந்த ஒரு திடமான நடவடிக்கையும் ஒன்றிய அரசால் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.


 

;