districts

img

இன்று பக்ரீத் பண்டிகை ஜெயங்கொண்டத்தில் களை கட்டிய ஆட்டுச் சந்தை

அரியலூர், ஜூன் 16 - குறுக்கு ரோடு ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி, பல்லா யிரக்கணக்கான ஆடுகள் குவிக்கப் பட்டு விற்பனையானதால் சந்தை களை  கட்டியது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டம் பகுதியில் பிரசித்தி பெற்ற குறுக்கு  ரோடு ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டி கையையொட்டி, பல்லாயிரக்கணக் கான ஆடுகள் சந்தைக்கு வரவழைக்கப் பட்டன. 

தேனி, கம்பம், தஞ்சாவூர், கடலூர்,  அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் இருந்து ஆடுகளின் உரிமை யாளர்களும், வியாபாரிகளும் ஆயிரக் கணக்கான ஆடுகளுடன் வந்தனர். ரூ.5  ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை ஆடுகள்  விற்பனை செய்யப்பட்டன. 

இங்கு செம்மறியாடு, நாட்டு வெள் ளாடு, கருப்பு ஆடு, ஆந்திர ஆடு, பல்லு  ஆடு உள்ளிட்ட பல்வேறு ரகங்கள்  கிடைக்கும் என்பதால், இஸ்லாமி யர்கள் தங்கள் பகுதிக்கு தேவையான ஆடுகளை வாங்கிச் சென்றனர். சுமார்  20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெ றும் இந்த ஆட்டுச் சந்தையில் சரியான விலையில் ஆடுகள் கிடைப்பதாக இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியுடன் தெரி வித்தனர்.

வழக்கமாக இந்த ஆட்டுச் சந்தை யில் ரூ.2.30 கோடியில் இருந்து, ரூ.3  கோடி வரை ஆடுகள் விற்பனையாகும்.  இந்நிலையில், கடந்த ஆண்டை விட  இந்தாண்டு விற்பனை குறைந்ததால், ஆடுகளை ஓட்டி வந்த உரிமையாளர் களும் வியாபாரிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

இதற்கு காரணம், கடந்த ஒரு வார மாக பல இடங்களிலும் நடைபெற்ற ஆட்டுச் சந்தைகளில் வியாபாரம் முடிந்த நிலையில், பக்ரீத்திற்கு முதல்  நாள் நடைபெறும் இந்த ஆட்டுச் சந்தை யில் குறைந்த அளவே வியாபாரிகள் கொள்முதலுக்கு வந்துள்ளனர். நல்ல  வியாபாரம் நடைபெறும் என்று ஆடு களை ஓட்டி வந்துள்ள தங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆடு களை திரும்பவும் வாகனங்களில் ஏற்றிச் செல்ல வேண்டியுள்ளது என்றும்  தெரிவித்தனர்.

;