விருதுநகர், பிப்.18- சாத்தூர் அருகே வேலைக்குச் சென்ற மாற்றுத் திறனாளிப் பெண் மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந் தார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ளது சிந்தப்பள்ளி கிராமம். இப்பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவ ரது மகள் ராஜபாண்டி (33). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள ஒரு ஆலையில் வேலை பார்த்தார். அப்போது எந்திரத்தில் சிக்கிய அவரது கை ஊனமானது. அதே மில்லில் வேலை பார்த்த விஜய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மின்சா ரம் தாக்கி விஜய் பரிதாபமாக இறந்து விட்டார். இதையடுத்து ராஜபாண்டி தனது 2 குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். மேலும், வெற்றிலையூரணி யில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, வழக் கம்போல் வேலைக்குச் சென்ற ராஜ பாண்டி வீடு திரும்பவில்லை. அவரை செல்போனிலும் தொடர்பு கொள்ள முடிய வில்லை. எனவே அவரது குடும்பத்தினர் பல்வேற இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்தநிலையில், சிந்தப்பள்ளி-மேட்ட மலை இடையே உள்ள உப்போடையில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் ராஜ பாண்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் சில இடங்க ளில் காயங்கள் இருந்தன. தகவல் அறிந்த விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி கூராய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.