districts

img

கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

மயிலாடுதுறை, மார்ச் 20-  தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி இராமநாதபுரம் மாவட்டம் பரமக்  குடியில் சில நாட்களுக்கு முன்பு நடை பெற்றது.  இப்போட்டியில் மயிலாடுதுறையில் செயல்படும் ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவ, மாணவிகள் 7 பேர் கலந்து கொண்டு 4 தங்கம் 3 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங் களை வென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.  இந்நிலையில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளையும் மற்றும் வெற்றிக்கு உறு துணையாக இருந்த மயிலாடுதுறை மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் செயலாளரும் பயிற்சியாளருமான சென் சாய் கராத்தே கதிரவன் ஆகியோரை பூம்  புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முரு கன், தரங்கை பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி குமரவேல் உள்ளிட்டோர் பாராட்டி னர்.