சிவகங்கை, ஜூன் 18- தமிழ்நாடு தேசிய மாணவர் படையின் காரைக்குடி 9 ஆவது படைப்பிரிவு மற்றும் திருச்சி சரக தேசிய மாண வர் படை படைப்பிரிவிற்கான வருடாந்திர பயிற்சி முகாம் மற்றும் பல்வேறு தடைகள் ஓட்டத்துக்கான பயிற்சிகள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது .இம்முகாமை காரைக்குடி 9 ஆவது படைப்பிரிவு கமாண்டர் ரஜ்னீஸ்பிர தாப் துவக்கி வைத்தார் .இம்முகாமில் காரைக்குடி தேசிய மாணவர் படையைச் சேர்ந்த 2 மாணவர்கள் அதிக புள்ளி கள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் .இவர்கள் இரு வரும் அடுத்த வாரம் மயிலாடுதுறையில் நடைபெற உள்ள 12 நாள் முகாமில் கலந்து கொள்ள உள்ளனர். முகாமில் தேர்வு பெறும் பட்சத்தில் புதுதில்லியில் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்துகொள்வர். மாணவர்களை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர்கள் முனைவர் சாமிநாதன், பேராசிரியர் கருப்புசாமி பாராட்டினர்.