districts

img

வேதாரண்யம் ஒன்றியத்தில் குடிநீர் பிரச்சனை சரிசெய்யப்படுமா?

வேதாரண்யம், செப்.16- நாகை மாவட்டம் வேதா ரண்யம் ஊராட்சி ஒன்றிய அலு வலகம் முன்பு இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி னர். நூறு நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். நூறு நாள் வேலைக் கான தினக்கூலி ரூ.600 ஆக உயர்த்த வேண்டும். ஆயக்காரன்புலம்-1 ஊராட்சி யில் வடக்கு வெட்டுக்குளம் கரையில் 85 ஆண்டு காலமாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். வேதாரண்யம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் உள்ள குடிநீர் பிரச்சனைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். கத்தரிப்புலம் ஊராட்சியில் தெற்கு குத்தகை பகுதியில் சமுதாயக்கூடம், அங்கன்வாடி மையம் அமைத்து தந்திட வேண்டும்.  நாகக்குடையான் ஊராட்சி மேற்கு நடுசாலை தெருவில் வசிக்கும் மக்களுக்கு சமுதாயக்கூடம்,  குடிநீர் சாலை வசதி, குறிப்பாக ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இந்த பிரச்சனைகள் பெரும் அள வில் உள்ளதாக ஆர்ப்பாட்டத்தின் போது தெரி வித்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் பிரபு,  ஒன்றிய துணை செயலாளர் பிரபாகரன், மாவட்ட செயலாளர் வடிவேல், மாவட்ட  பொருளாளர் வெங்கட்ராமன், வேதாரண்யம்  ஒன்றிய செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.