districts

திருச்சி முக்கிய செய்திகள்

‘காட்டுப்பன்றிகளால்  பாழாகும் விவசாயம்’

சிவகங்கை, மார்ச் 23- காட்டுப்பன்றிகளால் விவசாயம் பாழாவதாக தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் முத்து ராமு தெரிவித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க இளையான்குடி தாலுகா  பேரவை கூட்டம் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் முத்துராமு, மாவட்ட துணைத் தலைவர் அழகர்சாமி, தாலுகா செயலாளர் விஜயன், தாலுகா துணைத் தலை வர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இளையான்குடி ஒன்றிய பகுதிகளில் காட்டுப்பன்றி களால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு வரு கிறது. காட்டுப் பன்றிகளுக்கு கருவேல் மரங்கள் பதுங்கு மிடங்களாக இருப்பது வேதனையானது. எனவே கரு வேல் மரத்தை அழித்து காட்டுப் பன்றிகளிடமிருந்து விவ சாயிகளை பாதுகாப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில துணைத்தலை வர் முத்துராமு கூறினார்.

சாலை விபத்தில்  ஏ.சி. மெக்கானிக் பலி

அருப்புக்கோட்டை, மார்ச் 23- அருப்புக்கோட்டை அருகே இரு சக்கர வாகனம் மீது  லாரி மோதியதில் ஏசி மெக்கானிக் உயிரிழந்தார். அருப்புக்கோட்டை புளியம்பட்டியை சேர்ந்தவர் பிரபு (43). ஏ.சி மெக்கானிக்காக பணிபுரிந்து  வந்தார். பர மக்குடியில் வேலையை முடித்துவிட்டு அங்கிருந்து தனது  இருசக்கர வாகனத்தில்   திருச்சுழி வழியாக அருப் புக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்தார். தமிழ்பாடி அருகே வந்த போது,  அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழி நோக்கி சென்ற லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பிரபு உயிரி ழந்தார். விபத்து ஏற்படுத்திய லாரி கட்டுப்பாட்டை இழந்து  சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து  திருச்சுழி காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரப்பர் கழிவுகள் தீப்பற்றியதில் பலருக்கு மூச்சுத் திணறல்

காரியாபட்டி, மார்ச் 23- காரியாபட்டியில் ரப்பர் கழிவில் ஏற்பட்ட தீயினால் பெரும் புகை மண்டலம் ஏற்பட்டது. அதை சுவாசித்த பல ருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. காரியாபட்டி பெரிய பள்ளிவாசல் பின்புறம் பாழ டைந்த கிணறு உள்ளது. அதில் ரப்பர் கழிவுகள் கொட்டப்  பட்டிருந்தது. இதில், மர்ம நபர் தீவைத்துள்ளார்.   இதனால் தீ மள,மளவென பரவி காரியாபட்டி பகுதி முழுவதும் கரும் புகைமண்டலமாக காட்சியளித்தது. இதனால், பலர்  மூச்சுத் திணறல் ஏற்பட்டு சுவாசிக்க சிர மப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரியாபட்டி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் பாழடைந்த கிணற்றில் கொழுந்துவிட்டு எரிந்த  தீயை ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி கட்டுக்குள்  கொண்டு வந்தனர். பின்னர்  புகை மண்டலம் படிப்படியாக குறைய தொடங்கியது. இந்த சம்பவம் குறித்து காரியாபட்டி போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாலிபர் மின்வேலியில் சிக்கி பலி

ஸ்ரீவில்லிபுத்தூர், மார்ச் 23- விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் வனத்துறைக்கு சொந்தமான பகுதி களில் மான், மிளா, முயல், காட்டுப்பன்றி போன்ற விலங்கு கள் ஏராளமாக உள்ளன. இந்தப் பகுதிக்குள் சிலர் அத்துமீறி விலங்குகளை வேட்டையாடி வருகின்றனர். இதனால் வனத்துறையினர் இரவு பகலாக ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். எனினும் அத்து மீறி சிலர் வேட்டையாடி வருகின்றனர். இந்த பகுதிகளில் உள்ள தோப்பு உரிமையாளர்கள் வனவிலங்குகள் அத்துமீறி உள்ளே நுழைந்து பயிர்களை சேதப்படுத்தாமல் தடுக்க அனுமதியின்றி மின்வேலி அமைத்து உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் மகன் முருகன்  (37) என்ற கூலி தொழிலாளியும், மங்காபுரம் மேல் பக்கம்  தெற்கு தெருவில் வசிக்கும் மூக்காண்டி மகன் மாடமுத்துவும் (32) சம்பவத்தன்று இரவு ஆயுதங்களு டன் பிள்ளையார் நத்தம் பகுதியைச் சேர்ந்த மாரி யப்பன் (65) என்பவரது தோட்டத்திற்குள் அத்துமீறி நுழை ந்து வனவிலங்குகளை வேட்டையாடச் சென்றனர்.  அப்பொழுது அந்த தோட்டத்தை சுற்றி மின் வேலி  அமைக்கப்பட்டு இருப்பது தெரியாமல் முருகன் மின்வேலி மீது காலை வைத்து பரிதாபமாக உயிரி ழந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தோட்ட உரிமையாளர் மாரியப்ப னிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா விற்றவர்கள் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர், மார்ச் 23- ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட மங்காபுரம் தனியார் பள்ளி அருகே நகர் காவல்  நிலைய சார்பு ஆய்வாளர் பாலமுருகன் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த அய்யம்பட்டி தெருவைச் சேர்ந்த சாந்தி யை விசாரித்தனர்.  அப்போது அவரிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான கஞ்சா 10 கிராம்  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்து அவர் கூறிய வாக்குமூலத்தின் படி திருத்தங்கல்லைச் சேர்ந்த மருதுபாண்டி என்ப வரை சோதனை செய்தபோது அவரிடமும் 10 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

பாஜக மனித குல விரோத கட்சி

வேல்முருகன் எம்எல்ஏ பேட்டி விருதுநகர், மார்ச் 23- மனிதகுலத்திற்கு விரோதமான பாஜவை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள  மாட்டோம். அக்கட்சியை எதிர்க்கிற அரசி யல் கட்சிகளை ஆதரிக்கிறோம் என தமிழக  வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண் ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல் முருகன் தெரிவித்தார். விருதுநகரில் செய்தியாளர்களை சந் தித்த அவர் கூறியதாவது: சிவகாசியில் அடிக்கடி நடைபெறும் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் விலைமதிப்  பற்ற மனித உயிர்கள் பலியாகி வரு கின்றன. எனவே, வெடி விபத்தை தடுக்க  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு தொழிலாளர்கள் 6 மாதம் மட்  டுமே வேலையில் ஈடுபடுகின்றனர். எனவே,  தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி தடை  காலங்களில் உதவித் தொகை வழங்கு வது போல, பட்டாசு தொழிலாளர்களுக் கும் 6 மாதம் உதவித் தொகை வழங்க  வேண்டும். விபத்தினால் உடல் உறுப்பினை இழக்கும் தொழிலாளர்களுக்கு நிரந்தர வருமானம் வரும் வகையில் அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய பாஜக அரசு, தமிழகத்தில் நடைபெற்ற 100 நாள் வேலைத் திட்டத் திற்கு தர வேண்டிய ரூ.3 ஆயிரம் கோடியை  உடனே வழங்க வேண்டும். கல்விக்கான நிதி ரூ.2,157 கோடியையும் வழங்க வேண்  டும். ஜிஎஸ்டியில் ஒரு ரூபாய்க்கு 23 பைசா வை வழங்கும் ஒன்றிய அரசு ஒதுக்கப் பட்ட நிதியை உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்திற்கு நிதியை ஒதுக்கா மல் பாரபட்சம் காட்டும் பாசிச ஒன்றிய  பாஜக அரசை வன்மையாக கண்டிக்கி றேன். தொகுதி மறுசீரமைப்பில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பிரதி நிதித்துவம் குறைவதை எதிர்த்து தமிழ் நாடு முதல்வர் பிற மாநில கட்சித் தலை வர்களைத் திரட்டி எடுத்துள்ள  நடவடிக்கை யை பாராட்டுகிறேன். பாஜக மனிதகுல விரோத நடவடிக்கை யை எடுத்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹோலி பண்டிகையின் போது,  பெரிய மரத்தை வைத்து மசூதியின் கேட்டை  உடைத்து உள்ளே சென்று ஒரு இளைஞ ரின் மேல் வண்ணத்தை தடவுகின்றனர். அவர் மறுப்பு தெரிவித்த காரணத்தால் அவரை  அடித்தே கொல்கிறார்கள். ஒரு பெண் ஓடுகிறார். அப்பெண்ணின் தலை மீது முட்டையை வீசி உடைக்கின்றனர். ஏற்க னவே மாட்டுக்கறி வைத்திருந்த இஸ்லாமி யரை அடித்துக் கொன்றார்கள். இப்படி மனித குலத்திற்கு விரோதமான பாஜவை  எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்; எதிர்க்கிறோம். அக்கட்சியை எதிர்க்கிற அரசியல் கட்சிகளை ஆதரிக்கி றோம். கடலூர்  மாவட்டத்தில் தோல் தொழிற் சாலைகளுக்காக 200 வருடங்களாக உள்ள  நிலங்களில் உள்ள மரங்களை அகற்றி மக்  களை வெளியேற்றுகின்றனர். நாமக்கல், ஈரோட்டை நாசம் செய்த சாயக் கழிவு களை கடலூரில்  கொண்டு வர முயற்சி செய்கின்றனர். எனவே,   மக்களைத் திரட்டி  போராட்டம் நடத்தி தடுத்து வருகிறோம் என  தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மார்ச் 26, 27 இல் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

தஞ்சாவூர், மார்ச் 23-  தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் நகராட்சி, பேரா வூரணி, பெருமகளூர் பேரூராட்சிகள் மற்றும் பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவோ ணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர்,  பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றி யங்களில் உள்ள 1,153 ஊரக குடியிருப்புகளுக்கான கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில், தஞ்சா வூர் ஒன்றியம், மணக்கரம்பை மற்றும் பட்டுக்கோட்டை பைபாஸ் சாலை ஆகிய இடங்களில் பிரதான  குடிநீர்க்குழாயில் நீர்க்கசிவு மற்றும் பழுதடைந்த 813 மி.மீ.  விட்டம் உள்ள எம்.எஸ். குழாயை  சரிசெய்தல் பணிகள் நடைபெறவுள்ளன.  இதனால், வரும் மார்ச் 26, 27 (புதன், வியாழன்) ஆகிய இரண்டு நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம் செய்வதால், இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் மேற்படி நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மாற்று ஏற்பாடு செய்துகொள்ளுமாறு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், திட்டக் கோட்டம். தஞ்சாவூர் நிர்வாகப் பொறியாளர் ப.நாகராஜ் தெரி வித்துள்ளார்.