districts

திருச்சி விரைவு செய்திகள்

ஏழ்மை நிலையில் இருக்கும்  இரட்டையர்களுக்கு கல்வித்தொகை

தஞ்சாவூர், ஆக.12-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் புனல்வாசல் கிரா மத்தைச் சேர்ந்தவர்கள் லட்சுமணன் - கலைச்செல்வி தம்பதியர். இவர்களுக்கு மகன் மௌனீசன், மகள் மௌனீசா என்ற இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.  இவர்கள் இருவரும் புனல்வாசலில் உள்ள ஒரு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் தந்தையார் லட்சுமணன் கொரோனா காலத்தில் உயிரிழந்தார். குழந்தைகள் இரு வரும் தாயாரின் பராமரிப்பில் இருந்து வருகின்றனர். தாயார் கூலி வேலை செய்து வருகிறார்.  இந்நிலையில் மாணவர்கள் இருவரும் கல்விக் கட்டணம் மற்றும்  புத்தகம், சீருடை வாங்க இயலாத நிலையில் வறுமையின் பிடியில்  இருக்கின்றனர். இவர்களின் இந்நிலை குறித்து அறிந்த, இடை யாத்தி வடக்கு இளந்தென்றல் சமூக நல அமைப்பைச் சார்ந்த நிர்வாகி கள், இருவரின் கல்விக் கட்டணத்தையும் அவர்கள் படிக்கும் புனல்வாசல்  பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் ரூ.10 ஆயிரத்தை செலுத்தி  உதவிக்கரம் நீட்டினர். 


போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
தஞ்சாவூர், ஆக.12 -  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி  சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.  உறுதிமொழியினை தலைமை ஆசிரியர் சாந்தி வாசிக்க, பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் கல்வி புரவலர் அப்துல் மஜீது, பேரூராட்சி துப்புரவு ஆய்வா ளர் அன்பரசன், துப்புரவு மேற்பார்வையாளர் வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் முதல்வன் உறுதிமொழி வாசிக்க மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.


பாலம் அமைக்கும் பணியை நிறைவு  செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

அய்யம்பேட்டை, ஆக.12 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி சாதிக் நகரில்  குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். அய்யம்பேட்டை நேரு நகர் அனைத்து தெருக்களிலும் புதிதாக சாலைகள் அமைக்க வேண்டும். அய்யம்பேட்டை பேருந்து நிலையத்தில் கழிவறை வசதி செய்து தர  வேண்டும். மின் மயானம் ஏற்படுத்த வேண்டும். ரயில்வே ஸ்டேசன் ரோடு கள்ளத் தெருவில் பாலம் அமைக்கும் பணியை நிறைவு செய்ய  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் அய்யம்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் ஷேக் அலாவுதீன் தலைமை  வகித்தார். நகரக் குழு உறுப்பினர் ராஜேந்திரன், நூர்தீன் முன்னிலை வகித்தனர். மாவட்டக் குழு உறுப்பினர்கள் காதர் ஹீசைன், ஒன்றியச் செயலாளர் முரளிதரன் கண்டன உரையாற்றினர். 


போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த  கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கும்பகோணம், ஆக.12 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரில் நாள்தோறும் கடும்  போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் மிகவும் சிரமத்திற்கு  ஆளாகி வருகின்றனர். மாநகரினுள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்து போலீசார் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாநகரின் முக்கிய சாலைகளிலும், சாலை ஓரங்களில் உள்ள வியாபாரிகள் தங்களது வியாபாரப் பொருட்கள், விளம்பர பலகைகளை சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து வைப்ப தால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக பல்வேறு குற்றச் சாட்டுகள் எழுந்தன.  இதனைத் தொடர்ந்து போக்குவரத்து போலீசார் வியாபார நிறுவ னங்களின் முன் பகுதியில் வைத்துள்ள ஆக்கிரமிப்புகளை தாங்க ளாகவே அகற்றி கொள்ள வேண்டும். தவறினால் சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பினர். அதன் பிறகும், வியாபாரி கள் பலர் தங்களது கடையின் முன்பு, சாலையை ஆக்கிரமித்து தட்டிகள்  அமைத்தும், மேசை அமைத்தும், தங்களது வியாபார பொருட்களை வைத்தும், விளம்பர பலகைகளை வைத்தும் போக்குவரத்துக்கு இடை யூறு ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. அதனடிப்படையில், கும்பகோணம் போக்குவரத்து காவல் ஆய்வா ளர் சரவணகுமார் தலைமையில், போக்குவரத்து போலீசார் கும்ப கோணம் கும்பேஸ்வரர் கோவில் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.  அப்போது, கும்பகோணம்-தஞ்சை சாலை, கும்பேஸ்வரர்கோவில் சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறமும் உள்ள  கடைகளின் முன்பு வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அதிரடி யாக பறிமுதல் செய்தனர். மேலும் இதுபோன்று சாலையை ஆக்கிரமித்து போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினால் வியாபாரிகள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்த னர்.


மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரிப்பில் தேசியக் கொடிகள்

திருவாரூர், ஆக.12- திருவாரூர் மாவட்டத்தில் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெரு விழாவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரு கின்றன. அந்த வகையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் தின் சார்பில் திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், திருத்துறைப் பூண்டி ஆகிய நகராட்சிகளுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் 50,633 மூவர்ண தேசிய கொடிகள் தைத்து தரும் பணிகள் நடை பெற்று வருகிறது.  தேசிய கொடி தைத்து தரும் பணியில் 6 அலகுகளில், 35 மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஈடுபட்டுள்ளன. தேசிய கொடிகள் நகராட்சிக்குட் பட்ட பகுதிகளிலுள்ள மக்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, மகளிர் சுய உதவிக் குழுவினரால் தைக்கப்பட்ட தேசிய கொடியினை மாவட்ட ஆட்சி யர் திருவாரூர் நகராட்சி ஆணையரிடம் வழங்கினார்.


வெங்காயம், வாழை முதன்மைப் பதப்படுத்தும் நிலையங்கள் வாடகைக்கு பெறலாம்

திருச்சிராப்பள்ளி, ஆக.12 - வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பில்,  விநியோகத் தொடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் பழங்கள், காய்கறி களின் தரத்தினை உயர்த்தி விவசாயி கள் சந்தையில் அதிக விலை கிடைக் கும் பொருட்டு வணிகப்படுத்திட முதன் மைப் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் லால்குடி, மண்ணச்சநல்லூர்-II, அரசலூர், பிடாரமங்கலம், திருச்செந்துறை, எம். புத்தூர் ஆகிய இடங்களில் வாழைக்கா கவும், மண்ணச்சநல்லூர் -II, தாத்தையங் கார்பேட்டை, உப்பிலியாபுரம் ஆகிய இடங்களில் வெங்காயத்திற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையங்களை பயன்பாட் டிற்கு கொண்டுவர பயன்பாட்டாளர் பயன் பாடு மற்றும் சேவை அடிப்படையில் குறைந்தபட்ச வாடகை தொகையாக கிலோவிற்கு 20 பைசா மட்டும் நிர்ண யம் செய்யப்பட்டு, வாடகைக்கு விடப்படவுள்ளது. இந்நிலையத்தினை வாடகைக்கு எடுக்க விருப்பமுள்ள விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் காய்கறி-பழ வணி கர்கள் ஆகியோர் செயலாளர், திருச்சி ராப்பள்ளி விற்பனைக் குழு, 199, மதுரை ரோடு, திருச்சி-8 என்ற முகவரி யில் அணுகலாம் என மாவட்ட ஆட்சியர்  பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.


ஆண்கள் மட்டுமே பங்கேற்ற  கிடா வெட்டு திருவிழா

தஞ்சாவூர், ஆக.12 -  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தளிகைவிடுதி கிராமத்தில் நல்லபெரம அய்யனார், செம்முனி, முத்துமுனி கோயிலில் கிடா வெட்டு திருவிழா வியாழக்கிழமை இரவு  தொடங்கியது. இதில் பக்தர்கள் நேர்த்திக் கடனாக வழங்கிய  சுமார் 1,000 ஆடுகள் வெட்டப்பட்டன. சமைக்கப்பட்ட உணவு கள் வெள்ளிக்கிழமை காலை முதல் ஆண்கள் மற்றும் சிறு வர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.  இந்த விருந்தில் தளிகைவிடுதி, அக்கரைவட்டம், சில்லத் தூர், வெட்டிக்காடு, திருவோணம், கறம்பக்குடி, தெற்கு கோட்டை, வடக்குகோட்டை, கிளாமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 20 ஆயிரம் ஆண்கள் பங்கேற்றனர்.