தமிழ்ப் பல்கலை.யில் விளையாட்டுப் போட்டி
தஞ்சாவூர், ஆக. 2 - தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 75 ஆவது ஆண்டு, சுதந்திர தின விழாப் போட்டிகளை துணைவேந்தர் தொடங்கி வைத்தார். தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 75 ஆவது சுதந்திர தினத்தைச் சிறப்பிக்கும் வகையில், கவிதை, பேச்சு, கட்டுரை, சிலம்பம், நாடகம், இசைக் கருவி இசைத்தல், தனிநபர் பாடல், குழுப்பாடல், தனி நபர் நடனம், குழு நடனம், ஓவியம், ரங்கோலி, குழு விளையாட்டு, தடகள விளையாட்டு என பல்வேறு போட்டிகள் ஆக.1 முதல் ஆக.12 வரை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்படுகின்றன. தமிழ்ப் பல்கலைக்கழகத் துறைகளுக்கு இடையே நடத்தப்படும் இப் போட்டிகளின் தொடக்க நாளில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் வி.திருவள்ளுவன் ஆடவர்களுக்கான கபாடிப் போட்டியை யும் மகளிருக்கான எறிபந்து போட்டியையும் தொடங்கி வைத்தார். முதல்நாள் நடைபெற்ற ஆடவர் கபாடிப் போட்டியில், கல்வெட்டி யல் மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் முதல் இடத்தையும், இலக்கியத்துறை மாணவர்கள் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். மகளிருக்கான எறிபந்துப் போட்டியில் கல்வெட்டியல் மற்றும் தொல்லி யல் துறை மாணவியர்கள் முதல் இடத்தையும், இலக்கியத்துறை மாண வியர்கள் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.
மாற்றுத்திறனாளிகள் தனித்துவ அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்கள்
அரியலூர், ஆக.2 - மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும் ஒன்றிய அரசி னால் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் தொலைதூரங்களில் இருந்து அடையாள அட்டை பெற வரும் மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை குறைக்கும் வகையில் அடையாள அட்டை வழங்க, குறுவட்ட அளவில் 20 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக, ஆக.4 அன்று அழகாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆக.5 அன்று திருமழப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் முகாம் நடைபெறும். இதில் மருத்துவர்கள் மாற்றுத்திறனாளிகளை பரிசோ தனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 மற்றும் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங் களுடன் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
அரியலூர், ஆக.2 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்த புரம் 3-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் கமலக்கண்ணன் (62). இவர் பட்டு நெசவுத் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் திருமணம் ஆகி தனியே வசித்து வரு கின்றனர். இந்நிலையில் கமலக்கண்ணனும், அவரது மனைவியும் கடந்த ஜூலை 29 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். திங்களன்று இரவு கன்னியாகுமரியில் இருந்து வீடு திரும்பிய கமலக்கண்ணன், வீட்டின் முன் பகுதி கேட்டின் பூட்டு, முன்கதவு பூட்டு, இரண்டு அறைகளின் கதவு ஆகியவை பாறையால் நெம்பி உடைக்கப்பட்டிருந்தன. அதிர்ச்சி அடைந்த கமலக்கண்ணன், இதுகுறித்து ஜெயங் கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.5 லட்சம் பணம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
விளிம்பு நிலை மக்களுக்கு நலவாரிய பதிவு அட்டை வழங்கல்
தஞ்சாவூர், ஆக.2 - தஞ்சாவூரில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடை பெற்றது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 342 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். தொடர்ந்து, வருவாய்த் துறை சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத் தின் கீழ், பாபநாசம் வட்டத்தைச் சேர்ந்த ஒரு பயனாளிக்கு மாதாந் திர விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, தொழிலாளர் நலத்துறை சார்பில் ஒன்பது பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதிய தொகைக்கான ஆணை, விளிம்பு நிலை மக்கள் 11 பேருக்கு நல வாரிய பதிவு அட்டையினை ஆட்சியர் வழங்கினார்.
உலக தாய்ப்பால் வார விழா: விழிப்புணர்வு பேரணி
அரியலூர், ஆக.2 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்திற்கு முன்பு போஷான் அபியான் ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி திட்ட ஜெயங்கொண்ட வட்டாரத்தின் சார்பாக உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு கோலப்போட்டி மற்றும் தாய்ப்பால் முக்கி யத்துவம், ஊட்டச்சத்து உணவுகள் பற்றி பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வண்ணம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சாரு நிலா தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபா கரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியானது ஜெயங் கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தொடங்கி, முக்கிய வீதி கள் வழியாக அண்ணாசிலைக்கு சென்று மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்தடைந்தது.
பேராவூரணி
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, வட்டாரத்தில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட, குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலு வலர் டாக்டர் வி.சௌந்தரராஜன் தலைமை வகித்தார். இதேபோல், காலகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர் சரண்யா ரஞ்சித் தலைமையில் விழா நடைபெற்றது.
கரூர்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் வீரராக்கியம் கிரா மத்தில் செவ்வாயன்று உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு, பச்சிளம் குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முறை மற்றும் விளையாட்டு மூலம் கற்றல் புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும் தாய்ப்பால் அவசியம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்ட பின்னர், விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.