districts

img

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு: ஆட்சியர்கள் ஆய்வு

பெரம்பலூர்/திருவாரூர், செப்.14 -  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையத்தின் மூலம் தொகுதி 2 மற்றும் 2ஏ  தேர்வுகள் நடந்தன. பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலைக் கல்லூரி மற்றும் தனலட்சுமி சீனிவா சன் கலை அறிவியல் கல்லூரி, எசனை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங் களை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், “பெரம்ப லூர் மாவட்டத்தில் 16 மையங்களில் நடை பெற்ற இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 8,046 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 5,938 பேர் தேர்வெ ழுதினர்.  2,108 பேர் தேர்வெழுத  வரவில்லை. தேர்வு நடைமுறை களை கண்காணிக்க 27  முதன்மை கண்காணிப்பா ளர்களும், 3 பறக்கும் படை களும், 11 நடமாடும் குழுக்களும் நியமிக்கப்பட்டு தேர்வு நடை முறைகள் முறையாக கண்கா ணிக்கப்பட்டன” என்றார்.  திருவாரூர் குரூப்-2 தேர்வு நடைபெறும் மையத்தினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ பார்வையிட்டார். திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத் துறைப்பூண்டி ஆகிய 3 வட்டங்க ளுக்குட்பட்ட 28 தேர்வு மையங்களில் 42 தேர்வு கூடங்களில் சனிக்கிழமை நடை பெற்றது. இத்தேர்வினை எழுத 11,994 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். தேர்வை 9213 பேர் எழுதினர். இத்தேர்வு பணிக்கு 42, முதன்மை கண்கா ணிப்பாளர்களும் 13, நடமாடும் கண்காணிப்பு  குழுக்களும் 3, பறக்கும் படைகளும் 42,  ஆய்வு அலுவலர்களும் 45 வீடியோ ஒளிப்  பதிவாளர்களும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.