districts

திருச்சி முக்கிய செய்திகள்

தென்னங்குடி: அடிக்கல் நாட்டு விழா

தஞ்சாவூர், நவ.6 - தஞ்சாவூர் மாவட் டம், பேராவூரணி அருகே  தென்னங்குடி ஊராட்சிக்கு  புதிய ஊராட்சி மன்ற  கட்டடம் கட்ட அடிக்கல்  நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்றத் தலைவர்  குணதா சரவணன் தலைமை வகித்தார். பேராவூரணி ஒன்றி யக்குழு தலைவர் சசி கலா ரவிசங்கர் முன் னிலை வகித்தார். பேரா வூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக் குமார் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு,  ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள ஊராட்சி  மன்ற புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டி பணி யைத் துவக்கி வைத்தார்.

நவ.13 வீரமரசன்பேட்டையில் மக்கள் நேர்காணல் முகாம் 

தஞ்சாவூர், நவ.6 -  பொதுமக்களின் குறைகளை உடனுக் குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2 ஆவது புதன் கிழமை “மக்கள் நேர் காணல் முகாம்” நடத்தப் பட்டு வருகிறது.  அதனொரு பகுதி யாக 13.11.2024 (புதன் கிழமை) அன்று தஞ்சா வூர் மாவட்டம், பூதலூர்  சரகம், வீரமரசன்பேட்டை கிராமத்தில் மக்கள் நேர் காணல் முகாம் நடத்திட  தஞ்சாவூர், மாவட்ட  ஆட்சியர் பா.பிரியங்கா  பங்கஜம் உத்தரவிட்டு உள்ளார்.  இந்த முகாமில் பொது மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்க ளது கோரிக்கை தொடர் பாக மனுக்களை அளித்து  தீர்வு பெறலாம். மேலும், 5.11.2024 (செவ்வாய்) அன்று முதல் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறு வதற்கு முன்னரே, பொது மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வீரமரசன்பேட்டை கிராம நிர்வாக அலுவலரிடம் அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பா.பிரி யங்கா பங்கஜம் தெரி வித்துள்ளார்.

நீர்நிலை புறம்போக்குகளில் உள்ள  குடியிருப்புகள், கடைகள் இடிக்கும் பணி தற்காலிக ஒத்திவைப்பு

பொன்னமராவதி, நவ.6 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சேங்கை ஊரணி அருகே ஆறு வீடுகள் நீர்நிலை புறம்போக்கில் உள்ளதாக கூறி, உயர்நீதிமன்ற உத்தரவின்படி அகற்ற பொன்னமராவதி வட்டாட்சியர் சாந்தா தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் (பொ)  சின்னசாமி, காவல் ஆய்வாளர் பத்மா ஆகி யோர் தலைமையிலான அதிகாரிகள் வந்தனர். அப்போது அவர்களை முற்றுகையிட்ட குடி யிருப்பு வாசிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திய வட்டாட்சியர், 6 குடும்பங்க ளுக்கும் மாற்று இடம் வழங்கப்படும்.  மாற்று இடம் வழங்கப் பட்ட ஒரு  மாதத்திற்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும். அதுவரை வீடுகள் இடிக்கப்படாது என்பதை ஏற்று குடியிருப்பு வாசிகள் கலைந்து சென்ற னர்.  அதேபோல பொன்னம ராவதி பேருந்து நிலையம்  எதிரில் உள்ள அமர கண்டான் குளத்தின் கரையை சுற்றியுள்ள கடை களை அப்புறப்படுத்த அதி காரிகள் சென்றனர்.  அப்போது அவர்களிடம் பேசிய கடைக்காரர்கள், 15  நாட்கள் அவகாசம் கேட்ட னர். அதை ஏற்ற வட்டாட் சியர் தலைமையிலான அதிகாரிகள் கடைகளை இடிக்காமல் திரும்பிச் சென்றனர்.

இலவச வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு  அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை

கும்பகோணம், நவ.6 - கடந்த 2005 ஆம் ஆண்டு தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும்  கண்காணிப்பு பிரிவில், தஞ்சாவூர் மீன்வளத் துறை கோட்டத் தில் மீனவர்களுக்கு இலவச வீடு கட்டும் திட்டத்தில் நடை பெற்ற முறைகேடு தொடர்பாக வழக்குப் பதியப்பட்டது. விசாரணையின் முடிவில் தஞ்சாவூர் மீன்வளத் துறையில் பணியாற்றிய வரைவு அலுவலர் ஆர்.கணேசன்,  கோட்டக் கணக்கர் முகுந்தன், உதவி பொறியாளர் இராம லிங்கம், இளநிலை பொறியாளர் சுப்புராஜ், லெட்சுமி நாராய ணன் ஆகியோர் மீது விதிகளுக்கு புறம்பாக நிர்ணயம் செய்யப்பட்ட அளவைவிட கூடுதலாக சிமெண்ட் மற்றும் கம்பி  கொள்முதல் செய்ததில் ரூ.4,42,45,783/- மற்றும் சிமெண்ட் மூட்டைகள் சரியாக பராமரிக்கப்படாமல் ரூ.22,50,427/- அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக தஞ்சாவூர் ஊழல் தடுப்பு  மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் கும்பகோணம் முதன்மை  குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல்  செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 4 ஆவது குற்றவாளி சுப்புராஜ் தவிர மற்ற  4 குற்றவாளிகளும் வெவ்வேறு காலக் கட்டத்தில் இயற்கை  எய்தினர். இதைத் தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்த கும்ப கோணம் முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா செவ்வாயன்று இளநிலை பொறியாளர் சுப்புராஜ் குற்றவாளி என தீர்ப்பளித்து, மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10,000/- அபராதமும், அபராதம் கட்ட தவறும்பட்சத்தில் மூன்று ஆண்டுகள் மெய்க்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.1,713.09 லட்சம் வருவாய்  கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குநர் தகவல்

கும்பகோணம், நவ.6  - தீபாவளி திருநாளையொட்டி, நவம்பர் 1  முதல் 4 வரை கும்பகோணம் போக்குவரத்துக்  கழகம் சிறப்பு பேருந்து மூலம் 93.79 லட்சம்  பேர் பயணித்தனர். இதன்மூலம் ரூ.1713. 09 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக கும்ப கோணம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அந்த அறிக்கையில் மேலும் தெரி வித்திருப்பதாவது: தீபாவளி திருநாளை கொண்டாடு வதற்காக சென்னை, விழுப்புரம், கோயம் புத்தூர், திருப்பூர், மதுரை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு சென்றுவிட்டு தீபாவளி பண்டிகை முடிந்து மீண்டும் பணிபுரியும், கல்வி பயிலும் நிலையங்களுக்குச் செல்ல  வசதியாக, கடந்த நவ.1 முதல் 4 வரை  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்  கும்பகோணம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.  கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மன்னார்குடி, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட தடப் பேருந்துகளுடன் நான்கு நாட்களுக்கும் சேர்த்து 1200 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப் பட்டுள்ளன.  நவ.1 முதல் 4 வரை கும்பகோணம் போக்குவரத்துக் கழகம், பேருந்துகளை சிறப்பான முறையில் இயக்கி நான்கு நாட்களில் ஒட்டுமொத்த வருவாய் ரூ.1713. 09 லட்சம் ஈட்டியுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.428.27 லட்சம் ஈட்டப்பட்டுள்ளது. அதிலும் நவ.4 அன்று ஒரு நாள் மட்டும் ரூ.628.13 லட்சம் ஈட்டியுள்ளது.  இது கும்பகோணம் கோட்டத்தின் ஒரு  நாளைய உச்சக்கட்ட வருவாய் ஆகும். அதே போல் கும்பகோணம் கோட்ட பேருந்து களில் நான்கு நாட்களில் ஒட்டுமொத்தமாக சுமார் 93.79 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.  அதாவது நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் 23.45 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இது நாளொன்றுக்கு சராசரியாக பயணம் செய்யும் பயணிகளைவிட, ஒரு லட்சம் பேர்  கூடுதலாக பயணித்துள்ளனர். அதிலும் நவ.4  அன்று மட்டும் 29.31 லட்சம் பேர் பயணித் துள்ளனர்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பட்டய கணக்காளர் தேர்வுக்கு பயிற்சி

திருவாரூர், நவ.6 - தாட்கோவின் முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு கணக்காளர்-இடைநிலை, செயலாளர்-இடைநிலை, செலவு  மற்றும் மேலாண்மை கணக்காளர்-இடைநிலை ஆகிய போட்டித்  தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னர் இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சி  பெற விரும்பும் மாணாக்கர்கள் இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவர்களின் குடும்ப ஆண்டு  வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஒரு வருட  பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படும் மாணாக்கர்களுக்கு தங்கும்  வசதி மற்றும் உணவு வசதிகள் தாட்கோ மூலம் ஏற்பாடு செய்யப்படும். தகுதியுள்ள மாணாக்கர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள  தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.

வேளாண் பணிகளில் டிரோன்கள்  பயன்பாடு: பெண்களுக்கு பயிற்சி

தஞ்சாவூர், நவ.6 -  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம், கிராமப்புற பெண்களுக்கு, குறிப்பாக மகளிர் சுய  உதவிக் குழு உறுப்பினர்களுக்கு டிரோன் தொழில் நுட்பத் தில் பயிற்சி வழங்கி, அதன் மூலம் உரிமத்துடன்கூடிய வேலைவாய்ப்பு அளித்து கிராமப்புற பெண்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்துவதற்காக புதிய திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் வாயிலாக டிரோன்களை இயக்குவது குறித்த பயிற்சியினை இஃப்கோ நிறுவனத்தின் மூலம் மகளி ருக்கு அளித்து, அதன் பின்னர் உரிய உரிமங்களை பயிற்சி பெற்ற மகளிருக்கு வழங்கி, அவர்கள் மூலம் டிரோன்களை இயக்கி விவசாயத்தை நவீன மயமாக்குவதே இத்திட்டத்தின் சிறப்பு அம்சம். முதல் கட்டமாக தமிழ்நாட்டில் நமது மாவட்டத்தில் பிரபல  உர நிறுவனமான இஃப்கோ நிறுவனத்தின் மூலம் சென்னை யில் மாநில அளவில் பயிற்சி அளிக்கப்பட்டு, அதன் அடிப்ப டையில் பயிற்சி பெற்ற உறுப்பினர்களுக்கு உரிமம் வழங்கப் பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்நிறுவனத்தின் மூலம் ஒரத்தநாடு வட்டாரத்தில் உள்ள மேலஉளூர் மற்றும் பொய்யுண் டார்கோட்டை ஊராட்சிகளின் ஊராட்சி அளவிலான கூட்ட மைப்பின் கீழ் செயல்பட்டு வரும் தாழம்பு மற்றும் இமயம் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு தலா ஒரு டிரோன்  வீதம் இந்நிறுவனத்தின் மூலம் 2 டிரோன்கள் வழங்கப் பட்டுள்ளன. இந்த டிரோன்கள் மூலம் ஊராட்சிகளை சுற்றியுள்ள கிராம மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், தாங்கள் சாகுபடி  செய்துள்ள வேளாண்மை பயிர்களுக்கு நவீன முறையில், குறைந்த வாடகையில், குறுகிய நேரத்தில் உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகளை பயிர்களுக்கு விரைவாக தெளித்து பொதுமக்கள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.