திருப்பூர், ஜன.25 - மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு சனிக்கி ழமை வெள்ளக்கோயில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், மொழிப்போர் தியாகி எஸ்.என்.பழனிச் சாமிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கேயம் தாலுகா செயலாளர் எம்.கணேசன், நடேசன் நகர் கிளைச் செயலாளர் கருப்புசாமி, சிவநாதபுரம் கிளைச் செயலாளர் லோகேஸ்வரன், முத்தூர் ரோடு கிளைச் செயலாளர் சரவண குமார் மற்றும் வெள்ளகோவில் நகரமன்ற உறுப்பினர் ராதா மணி முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.