புதுக்கோட்டை, ஜூலை 13-
புதுக்கோட்டையை அடுத்த செம்பாட்டூர் பகுதிக்கு பகுதிநேர அங்காடி, பேருந்து வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வியாழக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
போராட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் சி.ராஜா தலைமை வகித் தார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலச் செயலளார் எஸ்.சங்கர், மாவட்டச் செயலாளர் டி.சலோமி, துணைச் செயலாளர் எஸ்.பெரு மாள் ஆகியோர் உரையாற்றினார். போராட்டத்தை ஆதரித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயற்குழு உறுப்பினர் சி.அன்பு மணவாளன், மாவட்டக்குழு உறுப்பி னர் கி.ஜெயபாலன், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் எம்.மாரி முத்து ஆகியோர் பேசினர்.
சுமார் ஒரு மணிநேரமாக நீடித்த போராட்டத்தை அடுத்து புதுக் கோட்டை வட்டாட்சியர் எஸ்.விஜய லெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேல், அரசுப் போக்குவரத் துக் கழக கிளை மேலாளர் பழனி வேல், ஊராட்சி மன்றத் தலைவர் வசந்தா உள்ளிட்டோர் சங்கத் தலை வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர்.
பேச்சுவார்த்தையில் தண்ணீர் பந்தல்பட்டி கிராமத்திற்கு விரைவாக பகுதிநேர அங்காடி திறக்கப்படும், எதிர்வரும் திங்கள் கிழமை முதல் செம்பாட்டூர் வழியாக தண்ணீர்பந் தல்பட்டி கிராமத்திற்கு காலை யும், மாலையும் அரசு நகர்ப் பேருந்து இயக்கப்படும், செம்பாட்டூர் சிவன் கோவில் அருகில் உள்ள பழுத டைந்த நீர்த்தேக்கத் தொட்டிக்குப் பதி லாக புதிய நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்படும், குடிநீர்த் தேவைக் காக புதிய ஆழ்துளைக்கிணறு அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நடைமுறைப் படுத்த அதிகாரிகள் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது.