districts

திருச்சி முக்கிய செய்திகள்

பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் நவ.8 -  தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில், பிஎஸ் என்எல் அலுவலக வாயிலில், பிஎஸ்என்எல்  ஓய்வூதியர்கள் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.  சென்னை தொலைத் தொ டர்பு கூட்டுறவு சொசைட்டி உறுப்பினர்களின் முதிர்வுத்  தொகையினை 6 ஆண்டு களாக கொடுக்காமல் இழுத்தடிப் பதையும், ஒவ்வொரு உறுப்பி னருக்கும் சுமார் ரூ.4 லட்சம் முதல் 7 லட்சம் வரை நிலுவைத் தொகை கிடைக்காமல் தவிப்ப தையும், இது பற்றி அக்கறை  இல்லாமல் இருக்கும் பிஎஸ்என் எல் நிறுவனத்தையும் சொ சைட்டி நிர்வாகத்தையும் கண்டித்தும், போர்க்கால அடிப் படையில் உடனடியாக ஓய்வூதி யர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தியும் இந்த  கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நலச்சங்க கிளை தலைவர் பி. மாரிமுத்து தலைமை வகித்தார். 

உழவர் சந்தை துவக்க விழா

தஞ்சாவூர், நவ.8 -  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி ஆண்டவன்கோவில் அரசு கால்நடை மருத்துவமனை அருகே, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.11 லட்சம் உள்பட ரூ.45 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய உழவர் சந்தையை, காணொலி மூலம்  தஞ்சையிலிருந்து வியாழக் கிழமை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் வெள்ளிக் கிழமை காலை பேராவூரணி உழவர் சந்தை அலுவலக கட்டடத்தில், சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, கடை  அமைத்துள்ள விவசாயிக ளிடம், சொந்தப் பணத்தை கொடுத்து காய்கறிகள், கீரை கள், பழங்கள், தேங்காய், பூக்களை வாங்கி முதல் விற்ப னையை துவக்கி வைத்தார்.  தஞ்சாவூர் வேளாண் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) கோ.வித்யா, வேளாண்மை அலுவலர் தாரா,  துணை வேளாண்மை அலுவ லர் (உழவர் சந்தை நிர்வாக  அலுவலர்)  என்.ராஜகோபா லன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மணமேல்குடி அரசுப் பள்ளியில் வானவில் மன்ற போட்டிகள்

அறந்தாங்கி, நவ.8 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் வானவில் மன்ற போட்டிகள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது.  மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் அமுதா மற்றும் மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கணிதம் மற்றும் அறிவியல் அணுகுமுறைகள் என்ற தலைப்பில், ‘எங்கும் அறிவியல்; யாவும் கணிதம்’ தொடர்பான ஆய்வு கட்டுரைகள், செயல் திட்டங்கள் போன்றவற்றில் மாணவர்களின் பங்களிப்பு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நடுவர்களாக முதுகலை ஆசிரியர்கள் காளியம்மாள், உமாமகேஸ்வரி, ஆசிரியர் ராஜ்குமார் ஆகியோர் செயல்பட்டனர்.  ஆசிரியர் பயிற்றுநர் சசிகுமார் மற்றும் பன்னீர்செல்வம், வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

புத்தக ஆர்வலர்களுக்கு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பெரம்பலூர், நவ.8 - தனிநபர் இல்லத்தில் நூலகத்தினை பராமரித்து வரும் புத்தக ஆர்வலர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.  தமிழக அரசின் “சொந்த நூலகங்களுக்கு விருது வழங்கு தல்” என்ற அறிவிப்பினை  செயல்படுத்தும் பொருட்டு, மாவட்ட அளவில் சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு நூலகத் தினை தேர்வு செய்து ரூ.3000/– மதிப்பில் கேடயம் மற்றும்  சான்றிதழ் மாவட்டத்தில் நடத்தப்படும் புத்தக கண்காட்சி யில் மாவட்ட ஆட்சியரால் வழங்கி கௌரவிக்கப்படும். அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தனிநபர்  இல்லத்தில் நூலகத்தினை பராமரித்து வரும் புத்தக ஆர்வ லர்கள், தங்களது நூலகத்தில் உள்ள நூல்களின் எண்ணிக்கை,  அரிய நூல்கள் ஏதாவது இருப்பின் அதன் விவரம், எந்த ஆண்டு முதல் நூலகம் பராமரிக்கப்பட்டு வருகிறது என்ற விவரம் மற்றும் தங்களது பெயர், முகவரி, கைப்பேசி எண்ணு டன் நவம்பர் 20 ஆம் தேதிக்குள் பெரம்பலூர் மாவட்ட நூலக  அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அல்லது dloperambalur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி - மாவட்ட நூலக அலுவலர், மாவட்ட நூலக அலுவலகம், புதிய பேருந்து நிலை யம் எதிரில், துறைமங்கலம் அஞ்சல், பெரம்பலூர் மாவட்டம்  - 621 220, என்ற முகவரியில் நேரிலோ, 7538847847 என்ற தொலைபேசி எண்ணிலோ, மாவட்ட மைய நூலகரை 97863  18555 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது தங்கள் இல்லத்திற்கு அருகில் உள்ள நூலகர்களையோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாகமங்கலம் சாலையில்  வழிந்து ஓடும் கழிவுநீர் 

திருச்சிராப்பள்ளி, நவ.8 - திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் நாகமங்கலம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட நாகமங்கலம் நெடுஞ்சாலையில் மழை நீரோடு சேர்ந்து கிராமத்தில் உள்ள அந்தந்த தெருக்க ளில் உள்ள செப்டிக் டேங்க் கழிவுநீரும் கலந்து ஓடுகிறது. இதனால் நாகமங்கலத்துக்கு வந்து செல்லும் பொது மக்க ளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அந்தப் பகுதி யில் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்கள் மிகுந்த அவதிப் படுகின்றனர். தற்போது மழை காலம் தொடங்கி விட்டதால்,  பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து காய்ச்சல் வந்த வண்ணம்  உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும், நாகமங்கலம் ஊராட்சியும் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த சாலை யில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்காமல் இருக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகமங்கலம் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செல்போன் மூலமாக பம்பு செட்டுகளை இயக்கும் கருவிக்கு மானியம்

செல்போன் மூலமாக பம்பு செட்டுகளை இயக்கும் கருவிக்கு மானியம் புதுக்கோட்டை, நவ.8 - வீட்டில் இருந்தபடியே செல்போன் மூலமாக விவசாய பம்பு செட்டுகளை இயக்கும் கருவி மானியத்தில் வழங்கப் படுகிறது என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “விவசாயி கள் தங்களது பம்பு செட்டுகளை வீடுகளில் இருந்தபடியே இயக்கும் கருவி மானியத்தில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் அமைக்கப் பட்டுள்ள பம்பு செட்டுகளை தொலைவில் இருந்து செல்போன் மூலம் இயக்கவும், நிறுத்தவும் உதவுகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறு விவசாயிகள், குறு  விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு மொத்த செலவில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.7 ஆயிரமும்,  மற்ற விவசாயிகளுக்கு மொத்த செலவில் 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். புதுக் கோட்டை மாவட்டத்தில் 86 பம்புசெட்டுகளுக்கு இந்த கருவி  அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பழைய மின்மோட்டாரை மாற்றி புதிய மின் மோட்டாரை வாங்குவதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்ப டும். நுண்ணீர் பாசன அமைப்பு அவசியமாகும். தரிசு நிலங்க ளில் சிறு தானிய சாகுபடிக்கு உழவு மானியமாக அதிகபட்சமாக  ஹெக்டேருக்கு ரூ.5400 மானியம் வழங்கப்படும். சூரிய சக்தி மின்மோட்டார் பிஎம்கேயுஎஸ்யுஎம் திட்டத்தின்கீழ் மின் இணைப்பு பெற இயலாத விவசாய நிலங்களில் தனிநபர் விவசாயி களுக்கு சூரிய ஒளி மின் மோட்டார் வழங்கி நிறுவுதல் திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பான நிலத்தடி  நீர் குறு வட்டங்களில் மட்டும் இத்திட்டம் செயல்படுத்தப்படு கிறது. 3 முதல் 15 குதிரைத்திறன் வரை 60 முதல் 80 சதவீதம்  வரை மானியத்தில் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களான உதவி  செயற்பொறியாளர் (வே.பொ), திருச்சி மெயின் ரோடு,  திருக்கோகர்ணம், புதுக்கோட்டை, (கைபேசி எண்: 94421  78763) என்ற அலுவலகத்தையும், உதவி செயற்பொறியா ளர் (வே.பொ), நைனா முகமது கல்லூரி அருகில், இரா ஜேந்திரபுரம், அறந்தாங்கி, (கைபேசி எண்: 63834 26912) என்ற அலுவலகத்தையும், செயற்பொறியாளர் (வே.பொ),  திருச்சி மெயின்ரோடு, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை, தொலைபேசி எண்: 04322-221816 என்ற அலுவலகத்தையும் விவசாயிகள் அணுகி பயன்பெறலாம்” என்றார்.

கலைஞர் நூலகம் அமைக்க  4.57 ஏக்கர் நிலம் தேர்வு

திருச்சிராப்பள்ளி, நவ.8 - திருச்சியில் உலகத் தரம் வாய்ந்த மாபெரும் நூலகம்  கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என சட்டப் பேரவை யில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து தற்போது திருச்சியில் உலகத் தரம் வாய்ந்த மாபெரும் கட்டட வடிவமைப்பை அமைப்பதற்கான பணிகள்  தொடங்கின.  இது தொடர்பாக கட்டட வடிவமைப்பை தயார் செய்ய,  ஆலோசகர்களை தேர்வு செய்ய பொதுப் பணித்துறை டெண்டர் கோரியது. இதற்காக, நூலகம் அமைக்க திருச்சி  டிவிஎஸ் டோல்கேட் அருகில் 4.57 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப் பட்டுள்ளது. இந்த நூலகத்தில் 7 தளங்கள் அமைக்கப்பட உள்ளன. நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க பொதுப் பணித் துறை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தலைமையில் அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி  வருகின்றனர்.  தமிழகத்தில் சென்னை, மதுரைக்கு அடுத்து உலக தரம்  வாய்ந்த கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் திருச்சி யில் அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவுடையார்கோவில் அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு

அறந்தாங்கி, நவ.8 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று, பொதுப்பணி துறையின் மூலம் ரூ.42.72 லட்சத்தில், இரண்டு வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டிடத்தை வெள்ளியன்று காணொலி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி. ராமச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன், ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் மார்ட்டின் லூதர் கிங், மாவட்ட கல்வி அலுவலர் ஜெயந்தி, பள்ளி கல்வி மாவட்டத் துணை ஆய்வாளர் இளையராஜா, பள்ளியின் தலைமை ஆசிரியர் பாக்கியலட்சுமி ஆகியோர் மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.