திருச்சிராப்பள்ளி, செப்.6 - பொன்மலை தியாகிகள் நினைவு தினத்தையொட்டி, அவர்களது நினைவு ஸ்தூபிக்கு பல்வேறு அமைப்புகள் மலர்தூவி செவ்வணக்கம் செலுத்தினர். 8 மணிநேர வேலை, தண்டனை வழங்கும் முன் முறையான விசா ரணை, ஊதிய விகித மாற்றம் மற்றும் பறிக்கப்பட்ட உரிமைகளுக் காக வரலாற்று சிறப்புமிக்க ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் 1946 இல் நடைபெற்றது. அப்போது போராட்டத்தை ஒடுக்க பிரிட்டிஷ் இந்தியாவின் ஹாரிசன் தலைமையிலான மல பார் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில், தோழர்கள் தங்க வேலு, தியாகராஜன், ராஜூ, ராமச் சந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 5 பேர் குண்டு பாய்ந்து பொன்மலை சங்கத்திடலில் உயிர் நீத்தனர். இவர்கள் நினைவாக பொன் மலை தியாகிகள் 78 ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டக் குழு, டி.ஆர்.இ.யு மற்றும் சிஐடியு சார்பில் வியாழ னன்று பொன்மலை சங்கத்திட லில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிச்செல்வன், லெனின், ரேணுகா, மணிமாறன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, மாணவர் சங்க மாவட்டச் செயலா ளர் சேதுபதி, சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கரா ஜன், டிஆர்இயு பணிமனை கோட்டத் தலைவர் லெனின், செயல் தலைவர் ஜானகிராமன், பி.எச்.இ.எல் சிஐடியு சங்க பொதுச் செயலாளர் பரமசிவம், எல்.ஐ.சி ஊழியர் சங்க துணைத் தலைவர் ஜோன்ஸ், முன்னாள் துணைத் தலைவர் பன்னீர்செல்வம், சேகர், பி.எஸ்.என்.எல்.இ.யு மாவட்டச் செயலாளர் சுந்தர்ராஜன், பென்ச னர் சங்க மாவட்டச் செயலாளர் சின்னையன் உள்ளிட்ட பலர், பொன்மலை தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து, மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார். யு.பி.எஸ் விளக்க கூட்டம் பொன்மலை தியாகிகள் 78 ஆம் ஆண்டு நினைவு தினம் மற்றும் யு.பி.எஸ் (ஒருங்கி ணைந்த ஓய்வூதிய திட்டம்) விளக்க கூட்டம் டி.ஆர்.இ.யு பொன் மலை பணிமனைக் கோட்டம் மற்றும் சிஐடியு சார்பில் நடை பெற்றது. வியாழனன்று மாலை பொன் மலை ஆர்மரிகேட் அருகில் நடந்த கூட்டத்திற்கு பணிமனை கோட்ட தலைவர் லெனின் தலைமை வகித்தார். சிபிஎம் மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் பேசினர். ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை விளக்கி டி.ஆர்.இ.யு செயல் தலைவர் ஜானகிராமன் சிறப்பு ரையாற்றினார். உதவி பொதுச் செயலாளர்கள், சந்தான செல்வம், ராஜா, கரிகாலன் உதவி கோட்ட செயலாளர் சங்கர், ஓய்வூ தியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர், ஆர்மரி கேட்டி லிருந்து ஊர்வலமாக பொன்மலை சங்கத் திடலுக்குச் சென்றனர். அங்கு தியாகிகள் ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து செவ்வணக் கம் செலுத்தினர். பின்னர் தியாகி கள் புகழஞ்சலி கூட்டம் நடை பெற்றது.