மயிலாடுதுறை, செப். 20- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட வெளிப்பாளையம் சிப்ஸ் வீதி, ராதாகிருஷ்ணன் தெரு, சுனாமி குடியிருப்பு உள்ளிட்ட மூன்று கிராம மக்கள் பயன்பெறும் வகையில் 15 ஆவது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ், ரூ.22.50 லட்சம் மதிப்பீட்டில் 3 குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறப்பு விழா தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணசங்கரி குமரவேல் தலைமையில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டச் செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன், புதுப்பிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் எம்.அப்துல்மாலிக், பேரூராட்சி செயலாளர் முத்துராஜா, பேரூராட்சி செயல் அலுவலர் ராமபிரசாத் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், மீனவ பஞ்சாயத்தார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.