புதுக்கோட்டை, செப்.9 - எளிய குடும்பத்தில் இருந்து வந்த மாணவ, மாணவிகளும் கல்வியின் மூலம் பல்வேறு சாதனைகளைப் படைக்க முடியும் என்றார் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த மருதன் கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆறாம் ஆண்டு பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் (பொ) ந.சுலோக்சனா தலைமை வகித்தார். கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பி னர் எம்.சின்னதுரை முன்னிலை வகித்தார். விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் பேசியதாவது: கல்வி மனித சமுதாயத்திற்கு மிக மிக முக்கியமானது. பட்டங் களைப் பெற்று இருக்கிற நீங்கள், வாழ்நாளில் மிக முக்கியமான கட்டத்திற்கு வந்து இருக்கின்றீர் கள். பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் வரை பிரச்சனை இல்லை. கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு உங்கள் வாழ்க்கையை சிறப் பாக அமைத்துக் கொடுப்பதற்கு தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வர்’ திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அரசுத் துறை மட்டுமல்ல; தனி யார் துறையிலும் வேலை வாய்ப்பு களை அரசு உருவாக்கித் தரு கிறது. எளிய மக்களுக்காக உழைக்கும் எம்எல்ஏ எளிய குடும்பத்தில் பிறந்த வர்கள் சமூகத்தில் உயர்ந்த இடத்தை அடைந்துள்ளனர். அதற்கு இங்கே கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பி னராக இருக்கும் எம்.சின்ன துரையே உதாரணம். 20 ஆண்டு களுக்கும் மேலாக அவரை எனக்குத் தெரியும். சமூகத்தில் அடித்தட்டு நிலையில் இருக்கும் மக்களுக்காக அவரது அயராத உழைப்பால்தான், கந்தர்வ கோட்டை தொகுதி மக்கள் அவரை இந்த இடத்திற்கு உயர்த்தி இருக்கின்றனர். கந்தர்வகோட்டை தொகுதி மட்டுமல்லாது, தமிழ்நாடு முழு வதும் உள்ள விளிம்பு நிலை மக்க ளுக்காக அவர் தொடர்ந்து பணி யாற்றிக் கொண்டிருக்கிறார். சமூ கத்திற்கு நாம் செய்யும் சிறு, சிறு உதவிகள்கூட நம்மை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல உதவும். சாதாரண விவசாயக் குடும்பத் தில் பிறந்து 16 வயதில் தந்தையை இழந்த நான், மிகவும் சிரமப்பட்டுத் தான் இந்த இடத்திற்கு உயர்ந்து உள்ளேன். எனக்கு எம்சிஏ முது நிலை வகுப்பில் இடம் கிடைத்த போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எதிர்காலத்தில் நீங்களும் பல உயரங்களைத் தொட வேண்டும். நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். போட்டிகள் நிறைந்த உலகில் சாதனை நிகழ்த்தக் கூடியவர் களாக நீங்கள் உயர வேண்டும். அதற்கு நீங்கள் நிறைய நூல்களை வாசிக்க வேண்டும். நூலகங் களைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் மெய்ய நாதன் பேசினார்.