புதுக்கோட்டை, ஜூலை 19 -
புதுக்கோட்டை மாவட்டம் அன்ன வாசல் அரசு வட்டார மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்ட தனியார் தொண்டு நிறுவனப் பராமரிப்பில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்டோருக் கான இல்லம் மோசமாக செயல்பட்ட தைத் தொடர்ந்து, அதனை முறையாக கண்காணிக்காத இணை இயக்குநரை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெறவுள்ள பல் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை இரவு வந்தார். அப்போது அன்னவாசல் வட்டார அரசு மருத்துவமனைக்கு திடீரென ஆய்வுக் குச் சென்றார்.
அந்த வளாகத்தில் தனியார் தொண்டு நிறுவனத்தின் பராமரிப்பில் உள்ள மனநலக் காப்பகத்தை அமைச்சர் பார்வையிட்ட பின்பு, செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
மனநலக் காப்பகம் வெறும் 3 சிறிய அறைகளைக் கொண்டு, சுமார் 59 பெண்களை வைத்திருக்கும் இடமாக இருந்தது. ஓர் அறையில் 3 பேர் தங்க வைக்கப்படலாம் என்ற நிலையில், 15 பேருக்கும் அதிகமாக ஒவ்வொரு அறையிலும் தங்க வைக்கப்பட்டிருந்த னர். சுகாதாரமும் பேணப்படவில்லை. உணவும் சரிவர வழங்காததாக அங்கி ருந்தோர் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த இல்லத்தை ஆய்வு செய்திருக்க வேண்டிய, ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் கே. ராமுவை பணியிடை நீக்கம் செய்யவும், தலைமை மருத்துவ அலுவலர் சரவ ணனை இடமாற்றம் செய்யவும் உத்தர விடப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட அந்தத் தனியார் தொண்டு நிறுவனத் துக்கு அளிக்கப்பட்டிருந்த உரிமம் ரத்து செய்யப்படுகிறது. அந்த நிறுவ னத்துக்கு அரசு சார்பில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.