districts

திருச்சி முக்கிய செய்திகள்

பேராவூரணி வட்டத்தில் ஜமாபந்தி துவங்கியது

தஞ்சாவூர், ஜூன் 13-  தஞ்சாவூர் மாவட்டம்  பேராவூரணி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத் தில், 1433 ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வா யம் (ஜமாபந்தி) பட்டுக் கோட்டை வருவாய் கோட் டாட்சியர் ஜெயஸ்ரீ தலைமையில், வியாழக் கிழமை தொடங்கியது. பேராவூரணி வட்டாட்சி யர் தெய்வானை, முன்னிலை வகித்தார். பேராவூரணி தாலுகா பெருமகளூர் உள்வட்டத் திற்கு முதல் நாளான வியாழக்கிழமை தணிக்கை நடைபெற்றது.  ஜூன் 14 (வெள்ளிக் கிழமை) குருவிக் கரம்பை உள் வட்டத்திற் கும் வருவாய் தணிக்கை நடைபெற உள்ளது.  பாபநாசம் பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் அய்யம் பேட்டை சரகத்திற்கான ஜமாபந்தி நடந்தது.  தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையி னர் நல அலுவலர் சுதா  ராணி தலைமை வகித் தார். இதில் பட்டா மாறு தல், இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உட்பட 123 கோரிக்கை மனுக்கள் பொது மக்களிடமிருந்து வரப் பெற்றன. இதில் 2  பயனாளிக்கு பட்டா மாறு தல் ஆணை வழங்கப்பட் டது. 

இடம் ஆய்வு

பாபநாசம்,  ஜூன் 13 - மாவட்ட அமர்வு நீதி பதி பூர்ணா ஜெய ஆனந்த், தலைமை குற்ற வியல் நீதித் துறை நடுவர்  சண்முக பிரியா ஆகி யோர் பாபநாசம் நீதி மன்றத்தில் புதிய நீதி மன்ற கட்டடம் அமைவ தற்கான இடத்தை ஆய்வு செய்தார். இதில் பாபநாசம் மாவட்ட உரி மையியல் மற்றும் நீதித்  துறை நடுவர் அப்துல் கனி, பாபநாசம் தாசில் தார் மணிகண்டன், பொதுப் பணித் துறை பொறியாளர், சர்வேயர், பாபநாசம் அரசு வழக்கறி ஞர் வெற்றிச் செல்வன்  மற்றும் நீதிமன்ற ஊழியர் கள் பங்கேற்றனர்.

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

தஞ்சாவூர், ஜூன் 13-  குழந்தை தொழிலா ளர் முறை எதிர்ப்பு தினத் தினையொட்டி, தஞ்சா வூர் மருதுபாண்டியர் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பாக, மருதுபாண்டியர் கல்லூரி  வளாகத்தில் உறுதி மொழி எடுத்தல் நிகழ்வு நடைபெற்றது.  இந்நிகழ்வில், மருது பாண்டியர் கல்வி நிறுவ னங்களின் செயலர் மற்றும் நிர்வாக அறங்கா வலர் கொ.மருதுபாண்டி யன் முன்னிலை வகித் தார். மருதுபாண்டியர் கல்லூரியின் முதல்வர் மா.விஜயா, குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதி மொழியை வாசிக்க தொடர்ந்து துணை முதல்வர் இரா.தங்கராஜ், பேராசிரியர்கள், அலுவ லக மேலாளர் உள்ளிட்ட  அலுவலகப் பணியா ளர்கள், குழந்தைத் தொழிலாளர் முறை யினை அகற்றுவதற்கான உறுதிமொழியை எற்றுக் கொண்டனர்.  முன்னதாக, நாட்டு  நலப்பணித் திட்ட அலு வலர் ந.சந்தோஷ்குமார் வரவேற்றார். செஞ்சுருள்  அமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் கோ.சத்திய பிரபா நன்றி கூறினார். 

சேமியா பாக்கெட்டில் புகையிலைப் பொருட்கள் கடத்தல்: 3 பேர் கைது 

கும்பகோணம், ஜூன் 13- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள கிரா மங்களில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை, ஹான்ஸ் போன்ற போதைப் பொருட்கள் விற்பனை பரவலாக நடைபெற்று  வருகிறது. இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை  பயன்படுத்தும் சூழலில், இந்த விற்பனை ரகசியமாக நடக்கிறது. இவற்றை தடுக்க, போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு, போதைப் பொருட் கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைத்து, அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில், கும்பகோணம் பகுதியில் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சேமியா பாக்கெட்டுகளில் அடைத்து  புகையிலைப் பொருட்களை கடத்தி, வியாபாரம் செய்வதாக  காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, கும்பகோணத்தைச் சேர்ந்த முரளி என்பவர்  பெங்களூரு பகுதியில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை சேமியா உள்ளிட்ட உணவுப் பொருட்க ளின் பாக்கெட்டுகளில் அடைத்து, கும்பகோணத்திற்கு கடத்தி வந்து பதுக்குவது தெரிய வந்தது.  பின்னர் அந்த புகையிலைப் பொருட்களை கும்பகோணத் தைச் சேர்ந்த சரவணன் மற்றும் முத்து ஆகிய இருவர் மூலம், கும்பகோணம் மாநகரத்துக்கு உட்பட்ட தாராசுரம் பகுதியில் சில்லறை விற்பனையில் ஈடுபட்டதும் காவல்துறையினரின் விசாரணையில் வெளிவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் புகையிலைப் பொருட் களை கடத்தி விற்பனை செய்த மூவரையும் கைது செய்து,  அவர்களிடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜூன் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்று வழங்கும் முகாம்

கும்பகோணம், ஜூன் 13- மாற்றுத்திறனாளிகள் மருத்துவச் சான்று மற்றும் இதர சலுகைகள் பெற, பதிவு தொடர்பான சிறப்பு முகாம்கள் நடை பெற்று வந்தன. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் விதி முறைகளுக்கு உட்பட்டு, இந்த முகாம்கள் இரண்டு மாதங் களாக நிறுத்தி வைக்கப்பட்டன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்ட தால் ஜூன் 18 (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியளவில்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பெரிய மாதா கோவில் வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்று வழங்கும் சிறப்பு முகாம் அரசு மருத்துவர்கள் மற்றும் அதி காரிகளால் நடத்தப்பட உள்ளது.  அதில் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய  அடையாள அட்டை வாங்காதவர்களுக்கும், (UDID கார்டு)  வாங்காதவர்களுக்கும், முக்கியமாக நலவாரியம் பதியாத வர்களுக்கும் தேவையானவை செய்து தரப்படவுள்ளன. எனவே மாற்றுத்திறனாளிகளை இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத் தின் கும்பகோணம் வட்டம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.  முகாமிற்கு வருபவர்கள் கொண்டு வர வேண்டிய ஆவ ணங்கள்: ரேசன் கார்டு சேல் மற்றும் நகல் 2 செட், ஆதார்  கார்டு அசல் மற்றும் நகல் 2 செட், மருத்துவரிடம் சிகிச்சை பெற்று இருந்தால் அதற்கான ஆவணங்களை கொண்டு வர  வேண்டும். தனித்துவ அடையாள அட்டை (UDID CARD)  பெறாமல் இருந்தால் மாற்றுத்திறனாளிகளுக்கான அடை யாள அட்டை அசல் மற்றும் நகல் 2 செட், போட்டோ 5  கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசாயன உரங்கள் பயன்பாட்டை  குறைத்தல் விழிப்புணர்வு முகாம்

தஞ்சாவூர், ஜூன் 13-  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரத் தில், மணக்காடு கிராமத்தில்  அட்மா திட்டத்தின்கீழ் சமச்சீர்  உரமிடல் - ரசாயன உரங்கள் பயன்பாட்டினை குறைத்தல்  குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி  இயக்குநர் ஜி.சாந்தி வரவேற்றுப் பேசினார். பயிற்சியில்  ரசாயன உரங்களை சரியான முறையில் பயன்படுத்துதல்  பற்றிய தொழில்நுட்ப விளக்கம் குறித்து பட்டுக் கோட்டை தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் இணைப்  பேராசிரியர் இரா.ஆனந்த் உரையாற்றினார். தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர்  (உழவர் பயிற்சி நிலையம்) ஐயம்பெருமாள் தலைமை வகித்துப் பேசுகையில், “நடப்பாண்டில் செயல்படுத்தக் கூடிய திட்டங்களில் ரசாயன உரங்களை தவிர்த்து, இயற்கை முறையில் சாகுபடி செய்வதால் மண்ணின் வளமும் காத்து சத்தான உணவுப் பொருள்கள் கிடைக் கிறது. விவசாயிகள் ரசாயன உரங்களை பயன்படுத்துவ தற்கு முன்பு பயிருக்கு தேவையான உர விகிதத்தினை  அறிந்து பயன்படுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர்  (மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்) ஜெயசீலன்  பேசுகையில், பிரதம மந்திரியின் கௌரவ நிதி உதவி  பெறுவதற்கான வழிமுறைகள் தேவைப்படும் ஆவ ணங்கள் பற்றி எடுத்துரைத்து, அதில் விவசாயிகள் பயன்பெற வேண்டும்” என்றார். இயற்கை வேளாண்மை சம்பந்தமான இடுபொ ருட்கள், விவசாயிகளின் பார்வைக்கு வேளாண் கண்காட்சி யாக வைக்கப்பட்டன. இதை விவசாயிகள் பார்த்து பயன டைந்தனர். வேளாண்மை துணை அலுவலர் து.சிவசுப்ர மணியன் நன்றி கூறினார். இதில் 40-க்கும் மேற்பட்ட விவ சாயிகள் கலந்து கொண்டனர்.

வீட்டில் தனியாக இருந்த  மூதாட்டி படுகொலை

விருதுநகர், ஜூன் 13- விருதுநகரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை  பேனாவால் குத்திக் கொலை செய்து  தப்பிச்சென்ற சைக்கோ கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் ராமமூர்த்தி சாலையை சேர்ந்தவர் வேலம்மாள் (75), கணவர் இறந்த நிலையில் தனியாக  வசித்து வந்துள்ளார். இவரது மகள் லதா   வழக்கம் போல் உணவு கொடுத்துவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.  மாலையில்  மீண்டும் தாயாரை பார்க்க சென்றுள்ளார். அப்போது தாயார் வேலம்மாள் உடலில் பல்வேறு இடங்களில்  பேனாவால் குத்தப் பட்டு இறந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ந்து போன லதா. போலீசாருக்கு தகவல்  தெரிவித்தார். விரைந்து வந்த   கிழக்கு காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து   விசாரணை நடத்தி வரு கின்றனர்.

கன்னிவாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.1.64 லட்சம் பறிமுதல் 

சின்னாளப்பட்டி, ஜூன் 13- திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பத்திரப்பதிவு அலு வலகத்தில் திண்டுக்கப் லஞ்ச ஒழிப்புத்துறை ஊழல்  மற்றும் கண்காணிப்பு அலுவலர் நாகராஜன் தலைமையில்  புதனன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது கணக்கில் வராத 1 லட்சத்து 64.300 ரூபாய்  மற்றும் ஆவணங்களை  கைப்பற்றினர். சார்பதிவாளர் செந்தில்குமார்,மற்றும் பத்திரப்பதிவு பணியாளர்கள் ஆகியோரிடம் டிபன்பாக்ஸ் சட்டைப்பை, பேண்ட் பாக்கெட் முதலிய இடங்களில் பணம் இருந்ததாக அதிகாரி கள் தெரிவித்தார்.  பத்திரப்பதிவு அதிகாரிகள் விசா ரணைக்காக திண்டுக்கல் அழைத்துச்செல்லப்படுகிறார்கள். 

பள்ளி மாணவன் தற்கொலை

மதுரை, ஜூன். 13- மதுரை கூடல்புதூர் சங்கீத் நகர் பகுதியை சேர்ந்த வர் முபாரக். இவருடைய மகன் ஷேக்இமாம் (15). அந்த  பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்று விட்டு  வழக்கம் போல் வீட்டிற்கு வந்தார். பின்னர், படுக்கை அறைக்கு சென்றவர் நீண்ட நேரமாக வெளியே வர வில்லை. இதனால், பதற்றம் அடைந்த பெற்றோர் கதவை  உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு ஷேக்  இமாம்,  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது  தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து முபாரக் கூடல்  புதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

ஜூன் 21 இல் கண்டதேவி கோயில் தேரோட்டம் அனைத்து சமூகத்தினரும் இணைந்து வடம் பிடித்து இழுக்க உடன்பாடு

தேவகோட்டை, ஜூன் 13- கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில்  ஜூன் 21 ஆம் தேதி நடை பெறும் தேரோட்டத்தில் அனைத்து சமூகத்தினரும் இணைந்து வடம் பிடித்து இழுக்க உடன்பாடு ஏற்பட் டுள்ளது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டைஅருகே கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்கு உட்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. தென் னிலை, உஞ்சனை, செம் பொன்மாரி, இறகுசேரி ஆகிய 4 பகுதிகளைச் (நாடு)  சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கு வழி பட்டு வருகின்றனர். இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆனி மாதம் திரு விழாவும், தேரோட்டமும் நடைபெறும். தேரை வடம் பிடித்து இழுப்பதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சனையால் கடந்த 1998 ஆம் ஆண்டில் தேரோட்டம் நின்றது. பின்னர் பலத்த பாது காப்புடன் கடந்த 2002 முதல்  2006 வரை தேரோட்டம் நடை பெற்றது. தொடர்ந்து கும்பாபி ஷேக திருப்பணிகளுக்காக மீண்டும் தேரோட்டம் நிறுத் தப்பட்டது. கடந்த 2012 ஆம் ஆண்டு கும்பாபி ஷேகம் நடைபெற்ற பின்னர், கடந்த  4 ஆண்டுகளுக்கு முன் புதிய  தேர் செய்யப்பட்டது. ஆனால், தேர் வெள்ளோ ட்டம் நடக்கவில்லை. இதைத் தொடர்ந்து மகா.  சிதம்பரம் என்பவர் தொட ர்ந்த வழக்கில் 2020 ஆம்  ஆண்டு தேர் வெள்ளோட்டம் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கால் வெள்ளோட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் நீதி மன்றம் உத்தர வுப்படி இந்த  ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி தேர் வெள்ளோட்டம் நடை பெற்றது. தேவஸ் தான ஊழியர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இந்நிலையில் இக் கோயில் திருவிழா ஜூன்  13 ஆம் தேதி கொடியேற் றத்துடன் தொடங்குகிறது.  ஜூன் 21 ஆம் தேதி தேரோ ட்டம் நடைபெறுகிறது. இதை யடுத்து தேரை இழுப்பது  தொடர்பான கூட்டம் தேவ கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சி யர் பால்துரை தலைமையில் நடைபெற்றது. இதில் அதிகாரிகள் ,சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ மற்றும் தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி ஆகிய 4 பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் கலந்துகொண்டனர். இதில் அனைத்து சமூகத்தினரும் இணைந்து தேரை வடம் பிடித்து இழுப்பது என முடிவு செய்யப்பட்டது.