districts

img

கல்வி நிலையங்கள் முன்புள்ள மாதுபான கடைகளை அகற்றக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்

திருவெறும்பூரில் கல்வி நிலையங்கள் முன்புள்ள மாதுபான கடைகளை அகற்றக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மாணவர் சங்கத்தினர் அளித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு முழுவதும் போதை கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குற்றவாளிகள் குற்றம் செய்வதற்கு முன் தான் செய்வது குற்றம் என அறிய கூடாது என்பதற்காக போதையில் குற்ற செயலில் ஈடுபடுகின்றனர். குற்றம் செய்த பிறகு தான் செய்த குற்றத்திற்கு ஒருபோதும் வருந்தக்கூடாது என்பதற்காக குற்றத்தில் கிடைத்த அனைத்து பணத்தையும் வைத்துக்கொண்டு போதையில் குற்ற உணர்வுகள் இல்லாமல் நடமாடி வருகின்றனர்.

இதன் மூலம் தெரிவது போதை ஒரு மனிதனின் சிந்திக்கும் திறனை சிதைக்க கூடிய ஒரு மிக மோசமான காரணியாக செயல்பட்டு வருகிறது என்பதுதான். இந்த போதையை ஒழிப்பதற்காக ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும் மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் விழப்புணர்வு என்ற விளம்பரத்தை நடத்திக் கொண்டுதான் இருக்கிறது அது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கத்தில் அதே அரசாங்கம் தான் பள்ளிக்கூடங்கள், கல்லூரி நிலையங்கள் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் அரசு டாஸ்மார்க்கையும் இயக்கிக் கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அரசு தொழில் பயிற்சி கல்லூரிக்கு அருகாமையில் செயல்படும்  டாஸ்மார்க் கடை மற்றும் பார்,  அண்ணா வளைவு பகுதியில் இருக்கக்கூடிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அருகாமையில் அரசு டாஸ்மார்க் கடையை இயங்கிக் கொண்டு வருகிறது. இந்த டாஸ்மார்க் கடை அந்த பகுதியில் இயங்குவதால் மாணவர்களின் கல்விக்கும் அவர்கள் எதிர்காலத்திற்கும் மிகவும் ஆபத்தானது மற்றும் அந்த டாஸ்மார்க் கடை இயங்கி வரும் பகுதியானது தேசிய நெடுஞ்சாலைக்கு அருகாமையில் உள்ளது என்பதால் பல விபத்துக்கள் ஏற்படுகிறது.

டாஸ்மார்க் கடையில் மது அருந்தும் நபர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர் மாணவர்களையும், மக்களையும் அச்சுறுத்தும் அரசு அண்ணா வளைவு பகுதி இயங்கி வரும் அரசு மதுபான கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என மனு கொடுத்தும் பல்வேறு வகையில் போராட்டம் நடத்தியும் அரசு செவிசாகாமல் இருப்பது கண்டன தெரிவிக்க கூடிய ஒரு செய்தியாகவே கருதுகிறோம்.

இந்த டாஸ்மார்க் கடையில் மது அருந்தும் நபர்கள் அருகாமையில் இருக்கக்கூடிய கல்லூரியை மது அருந்தும் இடமாக தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர் அது மட்டும் இல்லாமல் மது அருந்திவிட்டு கல்லூரிக்கு வரக்கூடிய மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொள்கின்றனர். இதனை அறிந்த இந்திய மாணவர் சங்கம் டாஸ்மார்க் கடையை உடனடியாக இழுத்து மூட வேண்டுமென ஒரு சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தியது அந்த போராட்டத்தின் எதிரொலியாக மதுபான கடையின் அதிகாரிகளும் மாணவர்களும் அழைத்து திருவெறும்பூர் வட்டாட்சியர் தலைமையில் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது பேச்சுவார்த்தையின் பொழுது இன்னும் ஒரு சில நாட்களில் அரசு அண்ணா வளைவு பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையை வேறொரு இடத்திற்கு மாற்றி விடுவோம் என திருவெறும்பூர் வட்டாட்சியர் உத்தரவு அளித்தார். ஆனால் பேச்சுவார்த்தையில் சொன்னது போல் நடந்து கொள்ளாமல் பல மாதங்கள் ஆன பிறகும் இன்னும் அரசு மதுபான கடை கல்லூரிக்கு அருகாமையில் தான் இயங்கிக் கொண்டு வருகிறது.

இந்நிலையில், இன்று இந்திய மாணவர் சங்கத்தின் கிளை நிர்வாகி ஆர்த்தி  தலைமையில்  மாணவர்கள் திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் உடனடியாக கல்லூரிக்கு முன்பு இயங்கக்கூடிய டாஸ்மார்க் கடையை இழுத்து மூட வேண்டும் எனவும் தமிழக அரசு மாணவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் எனவும் திருச்சி மாவட்ட ஆட்சியரை தன்னிச்சையாக முடிவெடுக்க விடாமல் தடுத்து வரும் பின்புலம் யார் எனவும் கோசத்தை முன் வைத்தனர். இந்த போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் ஜி கே மோகன்  மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர் ஆமோஸ், புறநகர் மாவட்ட தலைவர்  வைரவளவன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். கிளை நிர்வாகி  துளசி ராம் நன்றியுரை ஆற்றினார். இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.