districts

img

தோழர் பி.என்.தங்கராசு நினைவு கல்வெட்டு திறப்பு

திருவாரூர், டிச.26 - முதுபெரும் தலைவர் தோழர் பி.என்.தங்கராசு முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருவாரூ ரில் கல்வெட்டு திறந்து, வீரவணக்கம் செலுத்தப்பட்டது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு சிபிஎம் திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல் மார்க்ஸ் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் கே.கோபு முன்னிலை வகித்தார். மங்களநாயகிபுரம் கிளை யின் சார்பாக அமைக்கப்பட்ட தோழர்  பி.என்.தங்கராசு உருவப் படத்துடன் அமைக்கப்பட்ட நினைவுக் கல்வெட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் திறந்து வைத்தார். முன்னதாக நினைவுக் கொடியை மாநிலக் குழு உறுப்பினர் ஜ.வி.நாகரா ஜன் ஏற்றினார். தொடர்ந்து திருத்து றைப்பூண்டியில் அமைக்கப்பட்ட தோழர் பி.தங்கராசு நினைவு மேடைக்கு  சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் சி.ஜோதி பாசு, கே.என். முருகானந்தம், கே.ஜி.ரகுராமன், கே.பி.ஜோதிபாசு, திருத்துறைப்பூண்டி நகர துணைத் தலைவர் எம்.ஜெயப்பிரகாஷ் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகரக் குழு மற்றும் மங்கள நாயகிபுரம் கிளை உறுப்பினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.