districts

img

அரசுப் பேருந்துகளில் பெண்களை இழிவாக நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாதர் சங்கம் வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 14 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொன்மலை இடைக்கமிட்டி 16 ஆவது மாநாடு திருச்சி பொன்மலை சங்கத் திடலில் திங்களன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு புவனேஸ்வரி, நாகவேணி, திலகவதி ஆகியோர் தலைமை வகித்தனர். மாநகர் மாவட்ட தலைவர் ரேணுகா, மாவட்ட செயலாளர் சரஸ்வதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட சத்திரம் பேருந்து நிலையம் முதல் பொன்மலை வரை இயங்கி வந்த அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும். மாநகர பகுதிகளில் நடைபெறும் வரும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து, சாலைகளை சீரமைக்க வேண்டும். அரசு பேருந்துகளில் பெண்களை இழிவாக நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் மீதான வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய தலைவராக கே.வைதேகி, செயலாளராக சி.புவனேஸ்வரி, பொருளாளராக ஆர்.திலகவதி மற்றும் மாவட்ட மாநாட்டு பிரதிநிதிகள் 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சித்ரா நன்றி கூறினார்.