இடுக்கி, டிச.7- இடுக்கி அணைக்கு நீர்வரத்து அதி கரித்துள்ள நிலையில் செருதோணி அணை யின் ஒரு மதகு செவ்வாயன்று (டிச.7) காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. மூன்றாவது எண் மதகு முதலில் 40 செ.மீட்டரும் பின்னர் 60 செ.மீட்டரும் உயர்த்தப்பட்டது. மூன்று மாதங்களில் இடுக்கி அணை திறக்கப்படுவது இது நான்காவது முறை யாகும். அணையில் நீர்மட்டம் 2405 அடி யாக உள்ளது. நீர் திறப்பின் காரணமாக செருதோணி அணைக்கு கீழ் பகுதிகளில் உள்ளவர்கள் மற்றும் பெரியாற்றின் இரு கரையோரங்களில் இருப்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
முல்லைப்பெரியாறு முன்னறிவிப்பின்றி திறப்பு
இந்நிலையில், திங்களன்று இரவு திறக்கப்பட்ட முல்லைப் பெரியாறு அணை யின் 9 ஷட்டர்களில் 8 ஷட்டர்கள் செவ்வா யன்று காலை மூடப்பட்டன. தற்போது திறக்கப் பட்டுள்ள ஷட்டர்கள் வழியாக விநாடிக்கு 142 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக் கிறது. முல்லைப் பெரியாற்றில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேறத் தொடங்கிய தால், வல்லக்கடவு பெரியாற்றின் கரை யோரம் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். முல்லைப் பெரியாறு அணையின் 9 மதகுகளை திங்கள்கிழமை இரவு 8.30 மணியளவில் தமிழகம் 120 செ.மீ உயர்த்தி யது. இதன் மூலம் பெரியாறுக்கு விநாடிக்கு 12654.09 கன அடி தண்ணீர் வந்து சேர்ந்தது. இந்த சீசனில் அதிக அளவு தண்ணீர் வெளி யேற்றம் இதுவாகும். வழக்கத்தை விட அதி களவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் பெரி யாற்றிலும் நீர்மட்டம் உயர்ந்தது. கடசிக்காடு ஆற்றோரம், மஞ்சுமாலா ஆற்றோரம், விகாஸ் நகர், நல்லதம்பி காலனி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. முல்லைப் பெரியாறு அணையின் ஷட்டர் களை முன்னறிவிப்பு இல்லாமல் இரவு நேரத்தில் அணையைத் திறந்து, அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.