districts

img

ஸ்ரீரங்கம், அழகர் கோவிலில் இருந்து திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வஸ்திர மரியாதை

திருவில்லிபுத்தூர், ஜூலை 21-

    திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டத் தை முன்னிட்டு  ஸ்ரீரங்கம் ரங்க நாதர் கோவிலில் இருந்து  ஆண்டா ளுக்கு வஸ்திரம் மாலை மங்கள பொருட்கள் பரிமள திரவியம் ஆகிய வற்றை வெள்ளியன்று ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் தலைமையில் சுந்தர் பட்டர் ஆகியோரால் கொண்டுவரப்பட்டது.

    இதனை திருவில்லிபுத்தூர் ஆண் டாள் கோவில் முன்பு வைத்து கோவில் செயல் அலுவலர்  முத்து ராஜா பெற்றுக்கொண்டார். அப்பொ ழுது ஸ்தானிகம் ரங்கராஜன் என்ற ரமேஷ் ஆன்மீக சொற்பொழிவாளர் நாகை முகுந்தன், வேத பிரான் சுதர்சன் கோவில் அலுவலர்கள், பணி யாளர்கள், ஏராளமான பக்தர்கள் உட னிருந்தனர். இதே போல் மாலையில் மதுரை அழகர் கோவில் இருந்து பட்டு வஸ்திரம் பூ மாலை ஆகிய மங்களப் பொருட்கள் கொண்டு வரப் பட்டு விசேஷ பூஜைகள் நடத்தப் பட்டன. ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புடவை தான் ஆண்டாள் அணிந்து இன்று திருத் தேரில் எழுந்தருளி இலட்சக்கணக் கான பக்தர்களுக்கு காட்சியளிக் கிறார்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் கோவில் அலுவலர்களும் பணியாளர்களும் செய்திருந்தனர்.