ஏழு நாடுகளைச் சேர்ந்த 45 சுற்றுலாப் பயணிகள் பழமையான 22 கார்களில் 2,606 கிலோமீட்டர் தூரம் பயணித்து தஞ்சாவூர் வந்தனர். ஜாகுவார், மெர்சிடிஸ் உள்ளிட்ட பல்வேறு வகை பழமையான கார்களில் வந்த இவர்களை மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்றனர். இந்தியாவின் கலாச்சாரத்தை அறிந்துகொள்ளும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இப்பயணம் டிசம்பர் 1-ஆம் தேதி சென்னையில் நிறைவடையும் என மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர் தெரிவித்தார்.