அறக்கட்டளை நிர்வாகிகள் தேர்வு
தஞ்சாவூர், ஆக.8 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் 2020 ஆம் ஆண்டு முதல் பல் வேறு சமூகப் பணிகளை சேவையாக செய்து வரும், பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்ட ளையின் புதிய நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்ட னர். அதன்படி, தலை வராக விஆர்ஜி.நீல கண்டன், செயலாளராக மகாராஜா மற்றும் பொரு ளாளராக எம்.செந்தில் குமார் ஆகியோர் தேர்வா கினர். இவர்கள் 2024 முதல் 2026 வரை, பேரை துளிர் நண்பர்கள் அறக் கட்டளையின் நிர்வாகி களாக செயல்படுவர் என பொறுப்பாளர்கள் தெரி வித்துள்ளனர். புதிய பொறுப்பாளர்களுக்கு நண்பர்களும், அறக் கட்டளையின் உறுப்பி னர்களும் வாழ்த்து தெரி வித்தனர்.
விவசாயிகளுக்குப் பயிற்சி
பாபநாசம், அக்.8 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ளிக்கடையில் விவ சாயிகளுக்குப் பயிற்சி நடந்தது. இதில் பாப நாசம் வேளாண் உதவி இயக்குநர் முகமது பாரூக் பசுந்தாள் உரத் தின் பயன்கள், பசுந்தாள் விதைப்பு, மண்வள பாது காப்பு பற்றி கூறினார். வேளாண்மை அலுவலர் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை தாரா, பயறு வகை பயிர் களில் மதிப்பு கூட்டுதல், சாகுபடி தொழில் நுட்பங் கள் குறித்து விளக்கி னார். வேளாண்மை துணை அலுவலர் எபினேசன், நெல் பயிரில் களை நிர்வாகம், பாசன மேலாண்மை, பயிர் பாது காப்பு குறித்து விளக்கி னார். உதவி வேளாண்மை அலுவலர் குரு சரவணன், மாநிலத் திட்டங்கள், உயிர் உரங்கள் குறித்து கூறி னார். இதில் உள்ளிக் கடை மற்றும் அதன் சுற்று வட்டார கிராம விவசாயி கள் பங்கேற்றனர்.
அறந்தாங்கியில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி
அறந்தாங்கி, அக்.8 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் சைக்கி ளிங் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய ரத்த தான முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி ரோட்டரி சங்கத் தலைவர் அப்துல் பாரி தலை மையில் நடைபெற்றது. ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், துணை ஆளுநர் மருத்துவர் விஜய், மருத்துவர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் பேரணியை துவக்கி வைத்தார். கேம்பிரிட்ஜ் கேட்டரிங் கல்லூரி வளா கத்தில் இருந்து புறப்பட்ட ரத்த தான விழிப்பு ணர்வு பேரணி அறந்தாங்கி அரசு பொது மருத்துவ மனைக்குச் சென்று, அங்கு ரத்த தான முகாம் நடைபெற்றது. அறந் தாங்கி அரசு பொது மருத்துவமனை ரத்த வங்கிக்கு 55 யூனிட் ரத்தம் தன்னார்வலர்களால் வழங்கப்பட்டது. முன்னதாக ரத்ததான திட்ட இயக்குநர் பழனி வேல் வரவேற்றார். ஆண்டோ பிரவின் நன்றி கூறினார்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கிடுக! கும்பகோணத்தில் காத்திருப்பு போராட்டம்
கும்பகோணம், அக்.8- சம்பளம் வழங்காததை கண்டித்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட ஊழி யர்கள் கும்பகோணம் வட்டார வளமைய அலுவல கம் முன்பு கருப்பு பட்டை அணிந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒருங் கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின்கீழ் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டிய சென்ற (செப்டம் பர்) மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. இதை கண்டித்து கும்ப கோணத்தில் உள்ள வட்டார வளமைய அலுவலகம் முன்பு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட ஊழி யர்கள் கருப்பு பட்டை அணிந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒருங்கிணைந்த பள்ளிகளில் கல்வி திட்டத் தின் கீழ் பணியாற்றும் வட்டார வளமைய ஆசிரியர், பயிற்றுநர்கள், சிறப்பாசிரி யர்கள், இயல்முறை மருத்து வர்கள், பகுதிநேர பயிற்று நர்கள், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு கல்வி மற்றும் பயிற்சி மைய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இன்று புதுக்கோட்டை மாநகராட்சி முதல் கூட்டத் தொடக்க விழா'
புதுக்கோட்டை, அக்.8 - மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட புதுக்கோட்டை மாமன்றத்தின் முதல் கூட்டத் தொடக்க விழா அக்.9 (புதன்கிழமை) மாநக ராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற வுள்ளது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை வகிக்கிறார். மாநில நக ராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி, பிற்படுத்தப் பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய் யநாதன் ஆகியோர் முதல் மாமன்றக் கூட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். எம்.பி.,க்கள் எம்.எம்.அப்துல்லா, துரை.வைகோ, எம்எல்ஏ-க்கள் எம்.சின்னதுரை, வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்குரைஞர் கே.கே.செல்லப் பாண்டியன், துணை மேயர் மு.லியாகத்அலி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். முன்னதாக மாநகராட்சி மேயர் செ.திலக வதி வரவேற்கிறார். ஆணையர் த. நாராய ணன் நன்றி கூறுகிறார். புதுக்கோட்டையை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தி, கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தற்போது மாநகராட்சி மாமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத் தக்கது.
இலவச மருத்துவ முகாம்
பாபநாசம், அக்.8 - பாபநாசம் லயன்ஸ் கிளப், சுகம் கிளினிக் இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தின. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலத்தில் நடந்த முகாமில் மருத்துவர்கள் பொது கார்த்திக்கேயன், சண்முகவடிவு, ஆர்த்தோ மரு.அருண்ராஜ், பல் மருத்துவர் மோகனப் பிரியா ஆகியோர் 80-க்கும் மேற்பட்டோருக்கு சோதனை மேற்கொண்ட னர். இதில் பங்கேற்றவர்களுக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது. பாப நாசம் லயன்ஸ் கிளப் தலைவர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தஞ்சை பெரியகோயிலில் பௌர்ணமி திருதென் கைலாய வலத்துக்கு கூடுதல் ஏற்பாடுகள்: மேயர் தகவல்
தஞ்சாவூர், அக்.8 - தஞ்சாவூர் பெரிய கோயிலில் வருகிற பௌர்ணமி வலத்துக்கு கூடுதல் ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது என மேயர் சண். ராமநாதன் தெரிவித்தார். இது தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலர்களுடன் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற கலந்தா லோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியா ளர்களிடம் தெரிவிக்கையில், “தஞ்சாவூர் பெரிய கோயிலில் கடந்த மாதம் நடைபெற்ற பௌர்ணமி வலத்துக்கு எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாக வந்தது. தஞ்சாவூரி லிருந்து மட்டுமல்லாமல், கும்பகோணம், நாகப்பட்டினம், திருவா ரூர், மயிலாடுதுறை, அரியலூர், ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதியிலிருந்தும் பக்தர்கள் வந்தனர். திருவண்ணாமலை கிரிவலத்தை போன்று நடத்தப்படும் இந்த வலத்துக்கு சிவ பக்தர்கள் வேண்டுகோளின்படி, பெரு வுடையார் திருக்கோயில் ‘திரு தென் கைலாய வலம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த முறை அக்.16 அன்று மாலை முதல் அக்.17 காலை வரை திரு தென் கைலாய வலம் நடைபெறும். இந்த வலத்தை மாவட்ட ஆட்சியர் தலைமையேற்று தொடங்கி வைக் கிறார். கடந்த மாதத்தை விட இந்த முறை பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பெரிய கோயில் அருகேயுள்ள மேம்பாலத்தி லிருந்து பழைய நீதிமன்றச் சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. மேலும், ஏறத்தாழ 50 சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு போக்குவரத்துக் கழக அலுவலர்க ளிடம் கேட்கவுள்ளோம். பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வ தற்கு காவல் துறையினருடன் கலந்து ஆலோசித்துள்ளோம். திரு தென் கைலாய வலப் பாதையில் பக்தர்களுக்காக தற்கா லிக கழிப்பறை, குடிநீர் வசதி, தற்காலிக சிற்றுண்டி, அன்னதா னம் போன்றவை மேற்கொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தொடர்புடைய துறை அலுவலர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி இப்பாதையில் தளம், மின்விளக்கு, ஒலிபெருக்கி, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவை 6 மாதங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தென்னகப் பண்பாட்டு மையத்தின் மூலம் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது” என்றார்.